ரூ.12 கோடி மதிப்பிலான நகைகள் பறக்கும் படையினரால் பறிமுதல்
திருநெல்வேலி மாவட்டத்தில் பறக்கும் படையினர் ரூ.12 கோடி மதிப்பிலான நகைகளை பறிமுதல் செய்துள்ளனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனையடுத்து தேர்தலுக்காக மக்களுக்கு அரசியல் கட்சியினர் பரிசு பொருட்கள் மற்றும் பணம் கொடுத்து ஒட்டு சேகரிப்பதாக தெரியவந்தன.
இதனால் அதனை கவனிக்கும் பொருட்டு பறக்கும் படையினர் தமிழகம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், திருநெல்வேலி மாவட்டம் டக்கம்மாள்புரத்தில் வட்டாட்சியர் லட்சுமி தலைமையிலான தேர்தல் பறக்கும்படையினர் இன்று வாகனசோதனையில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது, அவ்வழியாக வந்த ஒரு வாகனத்தை மறித்து சோதனை செய்தனர்.
அப்போது, அந்த வாகனத்தில் 12 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இது குறித்து விசாரணை நடத்தியபோது அந்த நகைகளுக்கு உரிய ஆவணங்கள் இல்லை என்பது தெரியவந்தது.
இதையடுத்து பறக்கும் படையினர் அதனை பறிமுதல் செய்ததாக தெரிவித்தனர்.