5 சவரன் கீழ் நகைக்கடன் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது - அமைச்சர் அறிவிப்பு..!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தப்படி 14,40,000 பேருக்கு நகைக்கடன் தள்ளுப்படி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
நகைக்கடன் தள்ளுபடி
திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன் கூட்டுறவு சங்கங்களில் உள்ள 5 சவரனுக்கு கிழ் உள்ள நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என கூறியிருந்தது.
அதே போல் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர்,தமிழக சட்டப்பேரவையில் தேர்தல் அறிக்கையில் அறிவித்தப்படி 5 சவரன் கீழ் உள்ள நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
இதை தொடர்ந்து போலி நகைக்கடன் பெற்றிருந்ததும் தெரிய வந்தது.இதையடுத்து பல இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர் கூட்டுறவுத்துறை அதிகாரிகள்.
இந்நிலையில் ரூ.5,296 கோடி மதிப்பிலான 14,40,000 பேருக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.