4வது முறையாக..கணவரிடம் விவாகரத்து கேட்ட பிரபல நடிகை - முடிவுக்கு வருகிறதா 2 வருட உறவு?

Jennifer Lopez Divorce Hollywood
By Swetha Aug 22, 2024 10:46 AM GMT
Report

பிரபல ஹாலிவுட் நடிகை ஒருவர், தனது 4வது கணவரிடம் இருந்து விவாகரத்து பெறவுள்ளார்.

விவாகரத்து 

ஹாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகையும்,பாடகியுமானவர் ஜெனிஃபர் லோபஸ். பல பாப் பாடல்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர். ஒரு நடன கலைஞராக தொடங்கிய இவர் பல படங்களில் நடித்து ஹிட் கொடுத்துள்ளார். இவருக்கு தற்போது 55 வயது ஆகிறது.

4வது முறையாக..கணவரிடம் விவாகரத்து கேட்ட பிரபல நடிகை - முடிவுக்கு வருகிறதா 2 வருட உறவு? | Jennifer Lopez Divorcing 4Th Husband Ben Affleck

இவர் கடந்த 2022ஆம் ஆண்டு பிரபல நடிகர் பென் ஆஃப்லெக்கை திருமணம் செய்து கொண்டார். திருமண வாழ்க்கை நல்லப்படியாக சென்று கொண்டு இருந்த நிலையில், தற்போது முடிவு பெற உள்ளது.

தொழிலதிபருடன் தொடர்பா..? பாதை மாறும் நமீதா..? சிக்கலில் திருமண பந்தம்..?

தொழிலதிபருடன் தொடர்பா..? பாதை மாறும் நமீதா..? சிக்கலில் திருமண பந்தம்..?

2 வருட உறவு?

அதாவது ஜெனிஃபர் லோபஸ் தனது கணவரிடம் விவாகரத்து கோரியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், இந்த விவாகரத்திற்கான காரணம் குறித்தும், இவர்களின் ரிலேஷன்ஷிப் குறித்தும் பல தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

4வது முறையாக..கணவரிடம் விவாகரத்து கேட்ட பிரபல நடிகை - முடிவுக்கு வருகிறதா 2 வருட உறவு? | Jennifer Lopez Divorcing 4Th Husband Ben Affleck

முன்னதாக ஜெனிஃபர் லோபஸ், ஒஜானி நோவா, மார்க் ஆண்டனி, க்ரிஸ் ஜட் உள்ளிட்ட மூன்று பேரை இதுவரை திருமணம் செய்திருக்கிறார். இவரது ஒரு சில திருமண வாழ்க்கை 2 அல்லது 1 ஆண்டுகளில் முடிவு பெற,

ஒரு திருமணம் மட்டும் 10 ஆண்டுகள் வரை நீடித்தது. இவருக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெனிஃபரும் பென் ஆஃப்லெக்கும் தங்கள் திருமண வாழ்க்கையில் இருந்து விலக இருப்பதாக முன்னரே தகவல்கள் வெளியானது. அது, தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.