கிறிஸ்துவ மதத்தை பரப்புவதாக தந்தை மீது புகார் - மைதானத்தில் ஜெமிமா செய்த சம்பவம்!
இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
ஜெமிமா ரோட்ரிக்ஸ்
ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

இதில் இந்திய வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் 127 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.
சர்ச்சைக்கு பதிலடி
இதற்கு பின் பேசிய ஜெமிமா இந்த வெற்றியைத் தந்த இயேசுவுக்கு நன்றி எனக் கூறி பைபிளில் இடம்பெற்றுள்ள ஒரு வசனத்தை குறிப்பிட்டு, நீ களத்தில் நில்.. உனக்காக இறைவன் சண்டை செய்வார் என குறிப்பிட்டார்.

முன்னதாக ஜெமிமா தந்தையான இவான் ரோட்ரிக்ஸ் மும்பை ஜிம்கானாவில் உள்ள கட்டிடத்தை பயன்படுத்தி கிறிஸ்துவ மதத்தை பரப்பும் முயற்சியில் ஈடுபட்டார் என்ற புகார் எழுந்தது. இதுகுறித்து சர்ச்சைகள் எழுந்த நிலையில் ஜிம் கானா மைதானத்தில் ஜெமிமாவுக்கு வழங்கப்பட்டிருந்த உறுப்பினர் அட்டை திரும்பப் பெறப்பட்டது.
இந்நிலையில் இந்தியாவுக்காக வரலாற்று சிறப்புமிக்க ஒரு இன்னிங்ஸை ஆடி, பைபிள் வசனத்தை பேசி பதிலடி கொடுத்துள்ளார்.