லாரி மீது ஜீப் மோதி கோர விபத்து - துடிதுடித்து பறிபோன 3 உயிர்!
லாரி மீது ஜீப் மோதியதில் சம்பவ இடத்திலேயே 3 பேர் உயிரிழந்தனர்.
கோர விபத்து
வேலூர், கொணவட்டம் என்ற பகுதியில் அமைந்துள்ள சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் சாலையில் அதிகாலை லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது.
அந்த நேரத்தில் அவ்வழியாக ஜீப் ஒன்று வந்து கொண்டிருந்தது. அதில் ஓட்டுநர் உட்பட 4 பேர் வந்துள்ளனர். அப்போது இந்த ஜீப் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அங்கு நின்று கொண்டிருந்த லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
3 பேர் பலி
இந்த விபத்தில் சிக்கி ஜீப்பில் இருந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், படுகாயத்துடன் ஒருவர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தொடர்ந்து இந்த விபத்து குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில், இந்த விபத்தில் சிக்கி சென்னை மணலி பகுதியைச் சேர்ந்த மாலிக் பாஷா உள்பட 3 பேர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.