தினமும் புது புது எண்களில் இருந்து 100 முறை போன்; விடாமல் தொந்தரவு..கணவர் கைது!

Japan World
By Swetha Sep 19, 2024 11:54 AM GMT
Report

மனைவிக்கு தினமும் 100 முறை போன் செய்து கணவர் தொந்தரவு செய்துள்ளார்.

100 முறை.. 

ஹியோகோ மாகாணத்தைச் சேர்ந்த பெண் (31) ஒருவருக்கு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு தொலைபேசி எண்களில் இருந்து அழைப்புகள் வந்துள்ளது. அந்த அழைப்புகளுக்கு பதிலளித்தும் சிறிது நேரம் காத்திருந்துவிட்டு போனை கட் செய்துள்ளனர்.

தினமும் புது புது எண்களில் இருந்து 100 முறை போன்; விடாமல் தொந்தரவு..கணவர் கைது! | Jealous Husband Calls Wife 100 Time A Day Arrested

இது குறித்து தனது கணவரிடம் தெரிவித்தும் அவர் அலட்சியம் காட்டியதால் அப்பெண் விரக்தி அடைந்துள்ளார். செய்வதறியாமல் இருந்த பெண்ணுக்கு, ஒரு நாள் கணவன் தூங்கிக்கொண்டிருக்கும்போது,

போனில் விளையாடும்போது அல்லது அவளுடன் நேரத்தை செலவிடும்போது அழைப்புகள் வராததை உணர்ந்தார். இதனால் கணவர் மீது சந்தேகம் வந்ததை அடுத்து ஒருநாள் இருவரும் ஒன்றாக ஷாப்பிங் செய்யும் போது, அப்பெண் கணவரின் செயல்களை உன்னிப்பாகக் கண்காணித்தாள்.

அதாவது, அவர் தொலைபேசியைத் தொடாததைக் கவனித்தாள். அச்சமயத்தில் தொலைபேசி அழைப்புகள் வராததை உணர்ந்த பெண் இதுகுறித்து போலீஸில் புகார் அளித்தார்.

ஒரு நாளுக்கு 100 போன் கால் - கடைசியில் உண்மை தெரிந்து மிரண்ட மனைவி!

ஒரு நாளுக்கு 100 போன் கால் - கடைசியில் உண்மை தெரிந்து மிரண்ட மனைவி!

கணவர் கைது

போலீசார் தம்பதியரின் தொலைபேசி பதிவுகளை ஆய்வு செய்தபோது, கணவரே வெவ்வேறு தொலைபேசி எண்களில் இருந்து அழைத்து தொந்தரவு செய்தது தெரியவந்தது. மேலும், தம்பதியர்களுக்குள் பிரச்சனை எதுவும் இல்லை என்றும் இணக்கமாக வாழ்வதையும் தெரிந்து கொண்டனர்.

தினமும் புது புது எண்களில் இருந்து 100 முறை போன்; விடாமல் தொந்தரவு..கணவர் கைது! | Jealous Husband Calls Wife 100 Time A Day Arrested

இதையடுத்து கணவரை போலீசார் கைது செய்து விசாரித்த போது மனைவியை மிகவும் நேசிப்பதாக கூறினார். இந்த நிலையில், ஜப்பானில் தொலைபேசி அழைப்புகள் மூலம் தொல்லை தருவது

மன உளைச்சலை ஏற்படுத்துவது கிரிமினல் குற்றமாகக் கருதப்படுகிறது. மீறுபவர்களுக்கு ஒரு வருடம் வரை சிறைத்தண்டனை அல்லது 1 மில்லியன் யென் (US$7,000) வரை அபராதம் விதிக்கப்படலாம்.