ஆர்ப்பாட்டமில்லாமல் குருவாயூர் கோவிலில் மகளின் திருமணத்தை முடித்த ஜெயராம் !!குவியும் வாழ்த்துக்கள்
தென்னிந்திய திரையுலகில் பெரும் பிரபலம் பெற்ற நடிகராக இருந்து வருகிறார் ஜெயராம்.
ஜெயராம்
மலையாளத்தில் முன்னணி நாயகனாக இருந்த போதிலும், தமிழிலும் நாயகனாக நடித்து வந்தார் ஜெயராம். பின்னர், தமிழ் முன்னணி நாயகர்களின் படங்களில் துணை வேடமும் ஏற்று நடித்து வரும் ஜெயராம், அண்மை காலமாக தமிழ், தெலுங்கு, கன்னட மொழி படங்களில் வில்லன், குணச்சித்திர வேடங்களில் ஏற்று நடித்து வருகின்றார்.

மலையாளத்தில் அண்மையில் ஜெயராம் நடித்த "ஆபிரகாம் ஒஸ்லெர்" படம் பெரும் வெற்றி படமாக அமைந்தது. தற்போது, ஜெயராமின் மகன் காளிதாஸ் ஜெயராம் தமிழ், மலையாளம் என இரு மொழிகளிலும் நாயகனாக நடித்து வருகின்றார்.
கடந்த 1992-ஆம் ஆண்டு பார்வதி என்பவரை திருமணம் செய்து கொண்ட ஜெயராமிற்கு காளிதாஸ் மற்றும் மாளவிகா என இரண்டு பிள்ளைகள்.
திருமணம்
கடந்த டிசம்பர் மாதம் மாளவிகாவுக்கு நவ்னீத் கிரீஷ் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்தது. அதனை தொடர்ந்து இன்று கேரளாவில் பிரசித்தி பெற்ற குருவாயூர் கோவிலில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்களின் முன்னணியில் நடந்து முடித்துள்ளது.

நவ்னீத் கிரீஷ் சாட்டர்ட் அக்கவுன்டன்ட்டாக பணிபுரிந்து வருகிறார்.
இருவரது திருமணமும் காதல் திருமணம் என கூறப்படும் நிலையில், இவர்களது திருமணம் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி, ரசிகர்களின் வாழ்த்துக்களை பெற்று வருகின்றது.
பிரித்தானியாவால் ஐந்து ஆண்டுகள் தடுத்து வைக்கப்பட்ட இலங்கைத் தமிழர் ஆப்பிரிக்காவில் உயிரிழப்பு IBC Tamil
யாழை சேர்ந்த கர்ப்பிணிப் பெண்ணை நாடு கடத்தும் விவகாரம்! மதுரை உயர் நீதிமன்றின் விசேட தீர்மானம் IBC Tamil