3 குழந்தைகளின் தந்தையுடன் திருமணம் - சர்ச்சையில் சிக்கிய பிரபல நடிகை!
நடிகை ஜெயப்பிரதாவின் திருமண வாழ்க்கை சர்ச்சை நிறைந்ததாகவே அமைந்தது.
நடிகை ஜெயப்பிரதா
70 மற்றும் 80களில் தவிர்க்க முடியாத முன்னணி கதாநாயகியாகத் திகழ்ந்தவர் நடிகை ஜெயப்பிரதா. பல மொழியில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். பாலிவுட்,கோலிவுட், டோலிவுட் என முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக கலக்கியவர்.
தொடர்ந்து, தயாரிப்பாளர் ஸ்ரீகாந்த் நஹதாவை திருமணம் செய்துக் கொண்டார். அவர் ஏற்கனவே திருமணமாகி மனைவியும், 3 குழந்தைகளும் இருந்தன. மேலும், முதல் மனைவியை விவாகரத்து செய்யாததால் ஜெயப்பிரதாவுடனான திருமணம் சர்ச்சையை ஏற்படுத்தியது.
சர்ச்சையான திருமணம்
அதன்பின், மும்பையில் செட்டிலான இவர் இந்திப் படங்களில் நடித்து வந்தார். இதற்கிடையில், 1994ல் என்.டி ராமாராவின் தெலுங்கு தேசக் கட்சியில் சேர்ந்தார். சந்திரபாபு நாயுடுவோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக அக்கட்சியிலிருந்து விலகினார்.
அதனையடுத்து சமாஜ்வாதி கட்சியில் இணைந்து 2004ல் ராம்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2011ல் அக்கட்சியிலிருந்து விலகி ராஷ்ட்ரீய லோக்தளம் கட்சியில் சேர்ந்தார். ஆனால் அங்கும் நீடிக்காத அவர் பாஜகவில் இணைந்தார்.
தற்போது வெப் சீரிஸ்களில் கவனம் செலுத்தி வருகிறார்.