பிக்பாஸில் இந்த சர்ச்சை நடிகையா? கலைக்கட்ட போகும் சீசன் 6!

Kamal Haasan Silambarasan Bigg Boss Gossip Today
By Sumathi 3 மாதங்கள் முன்

பல சர்ச்சைகளை சந்தித்த ஸ்ரீநிதிக்கு பிக் பாஸ் சீசன் 6ல் வாய்ப்பு வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன.

பிக் பாஸ் சீசன் 6

கடந்த ஜனவரி மாதம் பிக் பாஸ் சீசன் 5 முடிவடைந்தது. இதில் ராஜூ ஜெயமோகன் டைட்டில் பட்டத்தை வென்றார். ஆங்கர் பிரியங்காவுக்கு 2 வது இடம் வழங்கப்பட்டது. அதன் பின்பு பிக் பாஸ் அல்டிமேட் என்ற பெயரில் ஒடிடியில் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கியது.

பிக்பாஸில் இந்த சர்ச்சை நடிகையா? கலைக்கட்ட போகும் சீசன் 6! | Bigg Boss Season 6 Sreenidhi Is Participatiig

இதை முதலில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். அதன் பின்பு அவர் இடையில் விலக நடிகர் சிம்பு பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இதனால் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்குவார்? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.

நடிகை ஸ்ரீநிதி

இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியை நடிகர் கமலஹாசன் தான் தொகுத்து வழங்கவுள்ளதாகவும் செய்திகள் உலா வருகின்றன. இதனால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்த சீசனில் போட்டியாளர்கள் லிஸ்ட் பல்வேறு கட்ட நிலைகளுக்கு பிறகு முடிவு செய்யப்பட்டுள்ளதாம்.

பிக்பாஸில் இந்த சர்ச்சை நடிகையா? கலைக்கட்ட போகும் சீசன் 6! | Bigg Boss Season 6 Sreenidhi Is Participatiig

போன சீசனில் நிறைய மாடல்கள் இருந்ததால் டி.ஆர்பியில் சின்ன சறுக்கல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதை சரிசெய்ய இந்த முறை போட்டியாளர்கள் பார்த்து பார்த்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் எனவும் கூறப்படுகிறது.

அந்த வகையில் டி.ஆர்.பியை குறி வைத்து சர்ச்சை சின்னத்திரை நடிகை ஸ்ரீநிதி வாய்ப்பு வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.