நடிகர் ஜெயம் ரவியுடன் விவாகரத்து? முற்றுப்புள்ளி வைத்த மனைவி ஆர்த்தி!

Jayam Ravi Tamil Cinema
By Sumathi Jun 21, 2024 05:30 PM GMT
Report

விவாகரத்து குறித்த வதந்திக்கு ஜெயம் ரவி மனைவி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

நடிகர் ஜெயம் ரவி

நடிகர் ஜெயம் ரவி கடந்த 2009 ஆம் ஆண்டு ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். ஆர்த்தி ரவியின் அம்மா ஹோம் மூவி மேக்கர்ஸ் எனும் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

jayam rvai - aarthi

இந்நிலையில், தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல பிரபலங்கள் அடுத்தடுத்து விவாகரத்து செய்து பிரிந்து வரும் நிலையில்,  முன்னணி நடிகர் ஆன ஜெயம் ரவி தனது மனைவியை பிரியப் போவதாக வதந்தி காட்டுத்தீ போல பரவி வருகிறது.

என் மனைவியே ஒருமாதிரி பாக்குறாங்க; நான் செஞ்சது சரிதான் - நடிகர் ஜெயம் ரவி பளீச்!

என் மனைவியே ஒருமாதிரி பாக்குறாங்க; நான் செஞ்சது சரிதான் - நடிகர் ஜெயம் ரவி பளீச்!

விவாகரத்து? 

தற்போது, ஜெயம் ரவி மோகன் ராஜா இயக்கத்தில் ஹீரோவாக நடித்த ஜெயம் திரைப்படம் வெளியாகி 21 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு அந்தப் படத்தின் போஸ்டர்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆர்த்தி ரவி வெளியிட்டுள்ளார்.

aarthi story

மேலும், "காதல் என்பது வார்த்தை அல்ல வாழ்க்கை" என்கிற வசனத்தை குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் வதந்திக்கு ஆர்த்தி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.