ஜெயலலிதா மரணம்..5 ஆண்டுகள் - ஆறுமுகசாமி ஆணையம் நாளை அறிக்கை தாக்கல்

J Jayalalithaa M K Stalin Tamil nadu Death
By Sumathi Aug 26, 2022 01:00 PM GMT
Report

ஜெயலலிதா மரணம் தொடர்பான நீதியரசர் ஆறுமுகசாமி தனது அறிக்கையை நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்குகிறார்.

ஜெயலலிதா மரணம் 

  மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்த, தமிழக அரசு 2017ஆம் ஆண்டு ஆறுமுகசாமி ஆணையத்தை அமைத்தது. இது தொடர்பாக சசிகலா மற்றும் அவரது உறவினர்கள், ஓ.பன்னீர்செல்வம்,

ஜெயலலிதா மரணம்..5 ஆண்டுகள் - ஆறுமுகசாமி ஆணையம் நாளை அறிக்கை தாக்கல் | Jayalalithaa Death Case Report Filed Tomorrow

அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகள் என பலரிடம் விசாரணை நடைபெற்றது. எய்ம்ஸ் மருத்துவக்குழு, தனது அறிக்கையை கடந்த சில நாட்களுக்கு முன் ஆறுமுகசாமி ஆணையத்திடம் ஒப்படைத்தது.

அறிக்கை தாக்கல்

இதன் அடிப்படையில், 600 பக்கங்கள் கொண்ட இறுதி அறிக்கையை ஆணையம் தயார் செய்துள்ளது.

ஜெயலலிதா மரணம்..5 ஆண்டுகள் - ஆறுமுகசாமி ஆணையம் நாளை அறிக்கை தாக்கல் | Jayalalithaa Death Case Report Filed Tomorrow

இந்நிலையில், நாளை காலை 10.30 மணிக்கு முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி, ஜெயலலிதா மரணம் தொடர்பான முழு வசாரணை அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்குகிறார்.