ஜெயலலிதா மரணத்திற்கு காரணம் இதுதான் .. ரகசியம் உடைத்த எய்ம்ஸ்

J Jayalalithaa O Paneer Selvam ADMK Edappadi K. Palaniswami
By Irumporai Aug 21, 2022 03:05 AM GMT
Report

மறைந்த முன்னள முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்தில் அப்பல்லோ மருத்துவமனை அளித்த சிகிச்சையில் தவறு இல்லை என எய்ம்ஸ் மருத்துவக்குழு ஆறுமுகசாமி ஆணையத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

ஜெயலலிதா மரணம்

தமிழகத்தின் முதலமைச்சராக  இருந்த ஜெயலலிதாவுக்கு கடந்த 2016 -ம் ஆண்டு உடல் நலபாதிப்பு ஏற்பட்டது.இதனை தொடர்ந்து அவர் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிசிச்சை பெற்று வந்த நிலையில் அதே ஆண்டு டிசமபர் -5 தேதி உயிரிழந்தார்.

அதே சமயம் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி விசாரணை ஆணையம் அமைக்க வேண்டுமென ஓபிஎஸ் வலியுறுத்தினார்.அதனை தொடர்ந்து அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் அமைக்க உத்தரவிட்டார்.

ஜெயலலிதா மரணத்திற்கு காரணம் இதுதான் .. ரகசியம் உடைத்த எய்ம்ஸ் | Jayalalithaa Death Report Arumugasamy Commission

இந்த ஆணையம் பல்வேறு கட்டமாக ,பல தரப்பினருடன் விசாரணை நடத்திய நிலையில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையத்திடம் எய்ம்ஸ் மருத்துவக்குழு 3 பக்க அறிக்கையினை தாக்கல் செய்துள்ளது.

அதாவது இந்த குழு அப்பல்லோ மருத்துவர்கள் அளித்த மருத்துவ அறிக்கை மற்றும் வாக்கு மூலங்கள் அடிப்படையில் ஆணையத்தில் அளித்த அறிக்கையின் இறுதி முடிவுகள் :

 உயர் இரத்த அழுத்தம் :

ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பாக நீரழிவு, உயர் இரத்த அழுத்தம், தைராய்டு, சர்க்கரையின் அளவு அதிகமாக இருந்தது உள்பட பல்வேறு பிரச்சினைகள் இருந்துள்ளது.

ஜெயலலிதா மரணத்திற்கு காரணம் இதுதான் .. ரகசியம் உடைத்த எய்ம்ஸ் | Jayalalithaa Death Report Arumugasamy Commission

அதற்கு சிறப்பு மருத்துவர்கள் சிகிச்சை அளித்துள்ளனர். மேலும், ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது திராட்சை, கேக், இனிப்புகளையும் சாப்பிட்டுள்ளார்.

20.09.2016 அன்று இரவு 10 மணிக்கு ஆம்புலன்ஸ் கேட்டு ஜெயலலிதா இல்லத்தில் இருந்து தொடர்பு கொண்டதாகவும், அப்போது ஜெயலலிதாவுக்கு முதற்கட்ட சிகிச்சை அளிக்க மருத்துவமனை கொண்டு வரப்பட்டதாகவும் அந்த அறிக்கை கூறியுள்ளது.

அதே சமயம் , மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்பு இன்சுலின் உள்பட நோய் தன்மைக்கு ஏற்ப மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளது. தற்காலிகமாக பேஸ்மேக்கர் கருவியும் ஜெயலலிதாவிற்கு பொருத்தப்பட்டுள்ளது.

ரிச்சட் பிலே வருகை

தொடர்ந்து லண்டன் மருத்துவர் ரிச்சட் பிலே உள்பட அப்பல்லோ சிறப்பு மருத்துவர்கள், எய்ம்ஸ் மருத்துவ குழுவும் சிசிக்சை அளித்து வந்தனர். டிசம்பர் 3 ம் தேதி ஜெயலலிதா உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. டிசம்பர் 4 ம் தேதி மூச்சுவிடுவதற்கு பெரும் சிரமபட்டுள்ளார்.

இதை தொடர்ந்து இதயம் செயலிழந்தால் எக்மோ கருவி பொருத்தப்பட்டு 24 மணி நேரம் கண்காணிக்கப்பட்டுள்ளது. டிசம்பர்5 ம் தேதி உரிய மருத்துவ நடைமுறைகள் அனைத்தும் கடைபிடிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 5

அப்பல்லோ மருத்துவர்கள் மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்கள் உடலை பரிசோதித்து மூளை மற்றும் இதயம் செயலிழந்தது என்பதை உறுதி செய்து டிசம்பர் 5 ம் தேதி 11.30 மணிக்கு ஜெயலலிதா உயிரிழந்ததாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

ஜெயலலிதா மரணத்திற்கு காரணம் இதுதான் .. ரகசியம் உடைத்த எய்ம்ஸ் | Jayalalithaa Death Report Arumugasamy Commission

எனவே மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் எவ்விதமான தவறுகளும் இல்லை என்றும் உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் எய்ம்ஸ் மருத்துவ குழு தெரிவித்துள்ளது.

ஆக ஜெயலலிதாவிற்கு உயர் ரத்த அழுத்தம் போன்ற பல பிரச்சினைகள் இருந்ததாகவும், அவருக்கு உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதன்  மூலம் ஜெயலலிதா மரணத்தில் அப்பல்லோ மருத்துவமனை அளித்த சிகிச்சையில் தவறு இல்லை எனபதை எய்ம்ஸ் மருத்துவக்குழு ஆறுமுகசாமி ஆணையத்தில் அறிக்கை மூலமாக தாக்கல் செய்துள்ளது.