அடுத்த விக்கெட் இன்னும் கொஞ்ச நாள்'ல..!! பொன்முடி வழக்கில் ஜெயக்குமார் கருத்து..!
உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதை அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.
அடுத்த விக்கெட்
பொன்முடிக்கு உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பிறகு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், உயர்நீதிமன்றம் வழக்கில் நல்ல தீர்ப்பை வழங்கியுள்ளதாக குறிப்பிட்டு, ஊழல் செய்தவர்களுக்கு சரியான பாடம் புகட்டப்பட்டுள்ளது என்றார்.
தற்போது ஒரு விக்கெட் விழுந்துள்ளது என்று குறிப்பிட்ட ஜெயக்குமார், ஒருவர் பின் ஒருவராக பல அமைச்சர்கள் சிறைக்கு செல்லும் நிலை வரும் என்று தெரிவித்து இது திமுகவிற்கு ஜெயில் காலம் என விமர்சனம் செய்தார்.
வழக்கு
முன்னதாக, முன்னாள் உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு தலா 50 லட்சம் அபராதம் விதித்த நீதிமன்றம், 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்துள்ளது.
ஆனால், தற்போதைக்கு அடுத்த 6 மாதங்கள் வரை தண்டனையை நிறுத்திவைத்தது மட்டுமின்றி, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய 30 நாட்கள் அவகாசமும் அளித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.