சிறையில் திமுக அமைச்சர்களுக்கே தனி கட்டடம் வேண்டும் போல - அண்ணமாலை விமர்சனம்..!!

M K Stalin K. Annamalai K. Ponmudy
By Karthick Dec 21, 2023 09:00 AM GMT
Report

அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் இருக்கும் நிலையில், தற்போது மற்றொரு அமைச்சர் சிறைக்கு செல்கிறார் என அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.

தனி கட்டடம் வேண்டும்

இது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில், மக்களின் வரிப் பணத்தை விஞ்ஞானப்பூர்வமாக மோசடி செய்யும் கலையில் பட்டம் பெற்றுள்ள ஊழலின் ஊற்று, இன்று உடைந்து நொறுங்கியிருக்கிறது.

ஏற்கனவே ஒரு அமைச்சர் திரு செந்தில் பாலாஜி சிறையில் இருக்கையில், மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்புக்கு பின், மற்றொரு அமைச்சர் திரு பொன்முடி, அவருடன் சிறையில் இணைகிறார்.

annamalai-slams-dmk-minister-ponmudy-in-verdict

திமுக அமைச்சர்களுக்கு எதிராக நிலுவையில் உள்ள எண்ணற்ற ஊழல் வழக்குகளைக் கணக்கில் கொள்ளும்போது, மத்திய சிறையில், முக ஸ்டாலின் அமைச்சர்களுக்கு என ஒரு தனி கட்டிடம் தேவைப்படும் போலத் தெரிகிறது என பதிவிட்டுள்ளார்.

பொன்முடி வழக்கு

முன்னதாக, இன்று சென்னை உயர் நீதிமன்றம் அமைச்சர் பொன்முடியின் சொத்து குவிப்பு வழக்கில் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது. அவருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பொன்முடி சட்டமன்ற உறுப்பினர் பதவியை இழந்துள்ளார்.

annamalai-slams-dmk-minister-ponmudy-in-verdict

பொன்முடிக்கு மேல்முறையீடு செய்ய 30 நாட்கள் காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ள நிலையில், 6 மாதங்களுக்கு அவரின் தண்டனையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.