நிர்வாகம் கிலோ எவ்வளவு என கேட்பார் ஸ்டாலின் - ஜெயக்குமார் விமர்சனம்

M K Stalin Indian Air Force Day Chennai D. Jayakumar
By Karthikraja Oct 06, 2024 02:30 PM GMT
Report

மெரினா வான்படை சாகச நிகழ்வில் பொதுமக்களுக்கு சரியான வசதிகள் இல்லை என ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மெரினா வான்படை சாகசம்

இன்று சென்னை மெரினா கடற்கரையில் இந்திய வான்படையின் சாகச நிகழ்வு நடைபெற்றது. இதை கண்டுகளிக்க 5 லட்சத்துக்கு அதிகமான மக்கள் மெரினா கடற்கரையில் குவிந்தனர். 

chennai marina air show

இதனால் ஏற்பட்ட கடும் நெரிசல் மற்றும் வெயில் காரணமாக பொதுமக்களில் 20 பேருக்கு மயக்கம் ஏற்பட்டது. மேலும் ரயில் நிலையங்கள் மற்றும் மெட்ரோ ரயில் நிலையத்தில் கட்டுக்கடங்காத கூட்டம் கூடியது. 

100 ஆண்டுகள் ஆனாலும் பாஜக இதற்காக வருந்தும் - ஜெயக்குமார்

100 ஆண்டுகள் ஆனாலும் பாஜக இதற்காக வருந்தும் - ஜெயக்குமார்

ஜெயகுமார் கண்டனம்

இந்த நிகழ்வில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் வான்படை அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். இது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் விமர்சித்துள்ளார். 

jayakumar

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டெரிக்கும் வெயிலில் சுடும் மணலில் மக்கள் பரிதவிக்கும் நிலையில் மத்திய-மாநில அரசுகளும் அவர்களது குடும்பங்களும் மட்டும் பல வசதிகள் கொண்ட பந்தலில் அமர்ந்திருப்பது கார்ப்பரேட் ஆட்சியின் அவலத்தை கண்முன் காட்டுகிறது.

ஸ்டாலின்

குடிநீர், உணவு, தற்காலிக கழப்பறை போன்ற எதுவும் ஏற்படுத்தபடவில்லை. இரயில்களில் மக்கள் தொங்கியபடி பயணம் செய்தனர். ஆனால் ஸ்டாலின் பேருந்துகளை காணவில்லை. முறையான முன்னேற்பாடுகளை அரசு ஏற்படுத்தாத காரணத்தால் காவல்துறையினருக்கும் மக்களுக்கும் இடையே வாக்குவாதங்கள் நிகழ்ந்தன! 

இரண்டு‌ நாட்களுக்கு முன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் ஆய்வாளர் பணிச்சுமையின் காரணமாக உயிரிழந்தார். காவல்துறையினருக்கு அதிக வேலையும் அழுத்தமும் கொடுப்பது வேதனைக்குரியது! நிர்வாகம்,கிலோ எவ்வளவு? எனக் கேட்கக் கூடிய முதலமைச்சராக தான் ஸ்டாலின் உள்ளார்" என தெரிவித்துள்ளார்.