100 ஆண்டுகள் ஆனாலும் பாஜக இதற்காக வருந்தும் - ஜெயக்குமார்

Smt Nirmala Sitharaman BJP D. Jayakumar
By Karthikraja Sep 13, 2024 08:30 PM GMT
Report

எந்த காலத்திலும் தமிழக மக்கள் பாஜகவை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என ஜெயக்குமார் பேசியுள்ளார். .

அன்னப்பூர்ணா சீனிவாசன்

கோவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்ட நிகழ்வில் அன்னப்பூர்ணா குழும உரிமையாளர் சீனிவாசன் ஜிஎஸ்டி குறித்து பேசி இருந்தார். 

annapoorna srinivasan

இதனையடுத்து, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை தனிப்பட்ட முறையில் சந்தித்து, நான் எந்தக் கட்சியையும் சேர்ந்தவன் இல்லை. தயவு செய்து மன்னித்துக் கொள்ளுங்கள்." என்று எழுந்து நின்று கை கூப்பும் வகையிலான சீனிவாசனின் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. 

விஸ்வரூபமெடுத்த அன்னபூர்ணா விவகாரம் - மன்னிப்பு கேட்ட அண்ணாமலை

விஸ்வரூபமெடுத்த அன்னபூர்ணா விவகாரம் - மன்னிப்பு கேட்ட அண்ணாமலை

ஜெயக்குமார்

சீனிவாசன் மன்னிப்பு கேட்கும் வீடியோ வைரலான நிலையில் இதற்கு எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உட்பட பலரும் பாஜகவுக்கு கண்டனம் தெரிவித்தனர். 


இது தொடர்பாக அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையில், மத்திய நிதி அமைச்சர் பங்குபெற்ற கூட்டத்தில் பேசிய அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் எந்தவிதத்திலும் தவறாக பேசவில்லை.

பாஜக வருந்தும்

தங்கள் தொழிலில் சந்திக்கும் சில பிரச்சினைகளை கோரிக்கையாக முன் வைத்தார். அதற்காக அவரை அழைத்து மிரட்டி மன்னிப்பு கேட்க வைத்திருப்பது தமிழ்நாட்டு மக்களையே கேவலப்படுத்தும் செயல்! அதை வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டிருப்பது பாசிசத்தின் உச்சம். 

கோயம்புத்தூர் மக்கள் பாசத்தில் மட்டுமல்ல ரோசத்திலும் அதிகமானவர்கள் தான். இனி எந்த காலத்திலும் தமிழ்நாட்டிலும் கோவையிலும் மக்கள் பாஜக-வை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். இந்த செயலால் இன்னுமொரு நூறாண்டு ஆனாலும் பாஜக இதற்காக வருந்தும் என தெரிவித்துள்ளார்.