விஸ்வரூபமெடுத்த அன்னபூர்ணா விவகாரம் - மன்னிப்பு கேட்ட அண்ணாமலை

Smt Nirmala Sitharaman Coimbatore BJP K. Annamalai
By Karthikraja Sep 13, 2024 11:30 AM GMT
Report

சீனிவாசன் மன்னிப்பு கேட்ட வீடியோவை பாஜகவினர் வெளியிட்டதற்கு அண்ணாமலை மன்னிப்பு கேட்டுள்ளார்.

சீனிவாசன் பேச்சு

கோவை கொடிசியாவில் தொழில் துறையினர் மத்திய அரசின் வரி விதிப்பு உள்ளிட்ட விவகாரங்களால் தங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் பற்றி எடுத்துரைக்கும் கலந்துரையாடல் நடந்தது. 

annapoorna srinivasan speech

இதில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார். இதில் பேசிய அன்னப்பூர்ணா குழுமத்தின் உரிமையாளரும், நிர்வாக இயக்குநருமான சீனிவாசன், குறைத்தால் எல்லாவற்றிக்கும் குறையுங்கள். ஒரே மாதிரி வரி போடுங்கள். 

நிர்மலா சீதாராமனிடம் அன்னபூர்ணா ஹோட்டல் ஓனர் மன்னிப்பு - என்ன காரணம்?

நிர்மலா சீதாராமனிடம் அன்னபூர்ணா ஹோட்டல் ஓனர் மன்னிப்பு - என்ன காரணம்?

மன்னிப்பு கேட்ட சீனிவாசன்

கணினியே திணறுகிறது. ஜிஎஸ்டி அலுவலர்கள் குழம்புகிறார்கள். எல்லாவற்றிற்கும் ஒரே இன்புட்தான். ஒரே கிட்சன்தான். ஆனால் வேறு வேறு ஜிஎஸ்டியால் அதிகாரிகள் குழம்புகிறார்கள் எனத் தெரிவித்தார். 

இவர் பேசிய வீடியோ வைரல் ஆன நிலையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை தனிப்பட்ட முறையில் சந்தித்து, நான் எந்தக் கட்சியையும் சேர்ந்தவன் இல்லை. தயவு செய்து மன்னித்துக் கொள்ளுங்கள்." என்று எழுந்து நின்று கை கூப்பும் வகையிலான சீனிவாசனின் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. 

annapoorna srinivasan sorry

சீனிவாசன் மன்னிப்பு கேட்ட வீடியோ தற்போது வைரல் ஆன நிலையில், இது குறித்து எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, திமுக எம்.பி கனிமொழி ஆகியோர் பாஜகவிற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

மன்னிப்பு கேட்ட அண்ணாமலை

இந்நிலையில் சீனிவாசன் மன்னிப்பு கேட்ட வீடீயோவை பாஜகவினர் வெளியிட்டதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மன்னிப்பு கேட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் அன்னபூர்ணா உணவக உரிமையாளர் ஸ்ரீநிவாசன் சந்தித்த வீடியோவை பாஜகவினர் வெளியிட்டதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.  

இது தொடர்பாக அன்னபூர்ணா நிறுவனர் ஸ்ரீநிவாசனை தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்தேன்.

அன்னபூர்ணா சீனிவாசன் தமிழ்நாட்டின் வணிக சமூகத்தின் தூணாக இருக்கிறார், மாநில மற்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்து வருகிறார். இந்த விவகாரத்தை இத்துடன் முடித்து வைக்குமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். என கூறியுள்ளார்.