சசிகலா ரீ என்ட்ரியா? எக்ஸிட் கொடுத்தாச்சு, வாய்ப்பே இல்லை - அடித்து சொன்ன ஜெயக்குமார்!
அதிமுகவுக்கு சசிகலா ரீ என்ட்ரி ஆக முடியாது என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சசிகலா ரீ என்ட்ரி
சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
விக்கிரவாண்டியில்தான் முழு அரசு இயந்திரமும் செயல்படும். ஈரோடு இடைத்தேர்தல் ஜனநாயக முறைப்படி நடக்கவில்லை என்பதால் விக்கிரவாண்டியில் போட்டியிடவில்லை. பாஜக தனித்து போட்டியிட்டு வாக்கு சதவீதம் அதிகரித்திருந்தால் அது சரியான வாதம்.
ஜெயக்குமார் ஆவேசம்
ஆனால் 10 கட்சிகளுடன் கூட்டணி வைத்துவிட்டு வாக்கு சசவீதம் அதிகரித்ததாக அண்ணாமலை கூறுகிறார். எத்தனை தேர்தல் வந்தாலும் பாஜகவின் வாக்கு சதவீதம் அதிகரிக்காது.
தமிழக பாஜகவுக்கு அண்ணாமலையை நீக்கிவிட்டு யாரை போட்டாலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை. சசிகலாவுக்கும் அதிமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
அவர் என்ட்ரி என்று சொல்கிறார். ஆனால் அவருக்கு எக்ஸிட் கொடுக்கப்பட்டுவிட்டது. ஜாதி, மதம் வேறுபாடு இல்லாமல் இருக்கு கட்சி அதிமுக. இங்கு எல்லோரும் சமம் என்ற நிலை தான் இருக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.