ஓபிஎஸ், சசிகலா, தினகரன் ஆகியோர் அதிமுக ரத்தத்தை குடித்த அட்டைகள் - ஜெயகுமார் விமர்சனம்!

Tamil nadu ADMK D. Jayakumar
By Swetha Jul 11, 2024 05:53 AM GMT
Report

ஓபிஎஸ், சசிகலா, தினகரன் ஆகியோர் அதிமுக ரத்தத்தை குடித்த அட்டைகள் என ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.

அதிமுக அட்டைகள்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியிடம் அதிமுகவில் ஓபிஎஸ், சசிகலா, தினகரன் ஆகியோரை இணைக்கு வாய்ப்புள்ளதா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் வாய்ப்பே இல்லை என்று கூறியிருந்தார்.

ஓபிஎஸ், சசிகலா, தினகரன் ஆகியோர் அதிமுக ரத்தத்தை குடித்த அட்டைகள் - ஜெயகுமார் விமர்சனம்! | Jayakumar Slams Ops Sasikala Dinakaran

இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் , அண்ணாமலை என்ற வேதாளம் எங்களை விட்டுவிட்டு செல்வப்பெருந்தகை மீது ஏறியுள்ளது,

மானத்தமிழன் மாண்டு போகிறான் - வேடிக்கை பார்க்கிறார்கள்!! ஜெயகுமார் கோபம்

மானத்தமிழன் மாண்டு போகிறான் - வேடிக்கை பார்க்கிறார்கள்!! ஜெயகுமார் கோபம்

ஜெயகுமார் 

ஓபிஎஸ், சசிகலா, தினகரன் ஆகியோர் அதிமுக ரத்தத்தை குடித்த அட்டைகள், அவர்களை அதிமுகவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என கூறுவது திட்டமிட்டு பரப்பப்படும் வதந்திகள்.அதிமுக தொண்டர்களின் ரத்தத்தைக் குடித்த அட்டைகளை மீண்டும் கட்சியில் சேர்க்க வாய்ப்பில்லை.

ஓபிஎஸ், சசிகலா, தினகரன் ஆகியோர் அதிமுக ரத்தத்தை குடித்த அட்டைகள் - ஜெயகுமார் விமர்சனம்! | Jayakumar Slams Ops Sasikala Dinakaran

அதிமுகவை 90% இணைத்து விட்டதாக சசிகலா கூறுவது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போன்றது. இந்த மூவரை தவிர அதிமுகவிலிருந்து வேறு யாரும் விலகிச் செல்லவில்லை என்று பேசியுள்ளார்.