மோடிக்கு மணிப்பூர் - ஸ்டாலின்க்கு கள்ளக்குறிச்சி!! ஒருசேர கலாய்த்த ஜெயக்குமார்
அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் பிரதமர் மோடி ஆகியோரை கடுமையாக விமர்சித்திருக்கிறார்.
கள்ளக்குறிச்சி விவகாரம்
கடக்கும் ஒவ்வொரு நாளும் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இது தொடர்பாக தமிழக எதிர்க்கட்சியான அதிமுக கூடிய சட்டமன்றத்தில் கடும் அமளியில் ஈடுபட்டார்கள்.
அதிமுகவினர் சபாநாயகர் அப்பாவு, இந்த கூட்டத்தொடர் முடிவடையும் வரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். இந்த சூழலில் தான் நேற்று, அதிமுகவின் சார்பில் சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலருமான எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் பட்டினி போராட்டம் நடத்தப்பட்டது.
ஜெயக்குமார் கலாய்
அதற்கு கடும் கண்டங்கள் தமிழக சட்டப்பேரவையில் வெளிப்பட்டது. நாம் தமிழர், தேமுதிக போன்ற கட்சிகள் ஆதரவு தெரிவித்தனர். இந்நிலையில், அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், கட்சியின் கழக அமைப்பு செயலாளருமான ஜெயக்குமார் இது தொடர்பாக பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அதில், பிரதமர் மோடியையும் அவர் விமர்சித்துள்ளார். கள்ளக்குறிச்சிக்கு போகவேயில்லையே எப்டி சமாளிச்சீங்க, ஸ்டாலின்..? மணிப்பூருக்கேப் போகாம நீங்க சமாளிச்ச மாதிரி தான், மோடிஜி என பதிவிட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சிக்கு போகவேயில்லையே எப்டி சமாளிச்சீங்க, ஸ்டாலின்..?
— DJayakumar (@djayakumaroffcl) June 28, 2024
மணிப்பூருக்கேப் போகாம நீங்க சமாளிச்ச மாதிரி தான், மோடிஜி pic.twitter.com/9BcJJfrdnb