அண்ணாமலை என்ற வேதாளம் எங்களை விட்டுருச்சு...ஜெயக்குமார் மகிழ்ச்சி
அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், அமைப்பு செயலாளருமான ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியது வருமாறு,
எழுச்சியுடன் கட்சி...
கட்சியை பொறுத்தவரையில் எழுச்சியுடன் நடக்கிறது. ஒன்றிணைந்தால் தான் வலிமை என ஒன்று மாயை உருவாக்கியிருக்கிறார்கள். அதில் உண்மை இல்லை. சசிகலா, டிடிவி, ஓபிஎஸ் ஆகியோரை தொண்டர்களும் - பொதுமக்களும் ஏற்று கொள்வார்களா?
பெரிய துரோகம் செய்த ஓபிஎஸ், அதிமுக ரத்தத்தை குடித்த அட்டைகள் அவர்கள் என்பது தொண்டர்கள். இது அழகாக கதை வசனம் எழுதி திட்டமிட்டு நடத்துகிறார்கள்.
ஓபிஎஸ் அம்மாவால் அறிமுகப்படுத்தடவில்லை. ஆனால், நாங்கள் அம்மாவால் அடையாளம் காட்டப்பட்டவர்கள். டிடிவி அடையாளம் காட்டியவர் ஓபிஎஸ். போடி சட்டமன்ற தொகுதியில் ஜானகியின் வேட்பாளருக்கு ஏஜெண்டாக இருந்தவர் ஓபிஎஸ்.
எல்லாம் மாயை
அவருக்கு புரட்சி தலைவரும் தெரியாது, அம்மாவும் தெரியாது. அந்த குடும்பத்திற்கு தான் அவர் விசுவாசமாக இருப்பார். அதன்பிறகு அம்மா பொறுப்பு கொடுக்கிறார்கள்.
கட்சியால் வளர்ந்தவர் கட்சி அலுவலகத்தையே அடித்து உடைக்கிறார். அதில் ஆதாயம் தேடுகிறார், கட்சிக்கு விசுவாசம் இல்லை. அவர் புறக்கணிக்கப்பட்டவர்.
சசிகலா கட்சியிலேயே இல்லையே, அவுங்க எப்படி ஒருங்கிணைப்பாங்க.அவர்கள் 3 பேரை தவிர கட்சியில் இருந்து யாரும் விலகி போகவில்லை. முழு பூசணிக்காயை, சோத்தில் மறைப்பது போல பேசுகிறார்கள். அவர்கள மூவர் தான் சேர்ந்துள்ளார்கள். ஒரு சிலரை வைத்து நீங்கள் ஒன்றரை கோடி தொண்டர்களை ஒப்பிட கூடாது.
CBI விசாரணை..
இப்போ தமிழ்நாட்டில் மாசத்தில் 100'க்கணக்கான் கொலைகள் நடக்கிறது. முதல்வர் தொகுதிக்கு அருகிலேயே நடக்கிறது. கட்சி மாநில தலைவர் ஒருவர் கொல்லப்படுகிறார். CBI விசாரணை வைக்கலாமே.
ஆனால், இதில் CCTV கேமரா பார்க்கப்பட்டதா? சிலது சந்தேகத்திற்குக்குரிய விஷயமாக உள்ளது. உண்மை வெளிவர CBI விசாரணை தான் வேண்டும். இதில், செல்வப்பெருந்தகை சட்ட ஒழுங்கு கெட்டுவிட்டது என கூறுவது உண்மை தானே. விக்கிரவாண்டி தேர்தலில், புறக்கணிக்கும் முடிவை எடுத்துவிட்டாச்சு. 18% வாக்குகள் பதிவாகவில்லையே. தேர்தல் முடிவுகள் வரட்டும் அப்போ அது வாக்கு பதிவுகள் குறித்து பேசலாம்.
லுங்கி
விக்கிரவாண்டி தேர்தல் நடக்கிறது.அங்கேயே கள்ளச்சாராயம் குடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்கள். நாட்டில் முதல்வர், அரசு இருக்கிறது என்பதே சந்தேகம். அடிப்படை கட்டமைப்பும் இல்லை, சட்ட ஒழுங்கும் இல்லை.இரண்டிலும் தோல்வி.
அண்ணாமலை என்னை பேசுகிறார். நான் எப்போதும் வேஷ்டி கட்டி கொண்டு தான் பேசுகிறேன். லுங்கி கட்டுவது அவமரியாதையா? முஸ்லீம்கள், மலேசியவில், சிங்கப்பூரில் ஏன் பெரும்பாலானவர்கள் வீட்டில் லுங்கி தானே காட்டுகிறார்கள்.
அண்ணாமலை என்ற வேதாளம் எங்களை விட்டு செல்வப்பெருந்தகை மீது ஏறிவிட்டது. அவரை மாதிரி நான் நைட்டி போட்டுட்டு நான் சுத்துறது கிடையாது.