அண்ணாமலை முதலமைச்சராவது - இலவு காத்த கிளி கதை..! ஜெயக்குமார் விமர்சனம்
அண்ணாமலை முதலமைச்சராவது இலவு காத்த கிளி கதையை போன்றது என அதிமுக மூத்த தலைவர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
தாமரை மலர்வது...
செய்தியாளர்களை சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசும் போது, தமிழகத்தில் இரட்டை இலை துளிர்விட்டு வளர்ந்திருக்கும் போது, தாமரை மலர்வது நடக்காது என உறுதிப்பட தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், சில நாட்களாக தமிழக பாஜக அண்ணாமலை முதலமைச்சராவது குறித்து பேசிய அவர், அண்ணாமலை முதலமைச்சராவது இலவு காத்த கிளி கதையை போன்றது என விமர்சனம் செய்தார்.
ஓடாத காளைகள் ...
மேலும், அரசியலில் ஓடாத காளைகள் அதிகமாக உள்ளன என குறிப்பிட்ட அவர், ஓடாத காளைகளுடன் நாங்கள் மோதுவதில்லை என தெரிவித்தார்.
தமிழர்களின் அடையாளத்தை யாராலும் மாற்ற முடியாது என்றும் தமிழர்கள் வீரமும், காதலும் இல்லாதவர்கள் அல்ல என்றும் கூறினார்.