கலவரமான பிறந்தநாள் கொண்டாட்டம் - கொடி ஏற்றுவதில் தகராறு - மல்லுக்கட்டிய இபிஎஸ் - ஓபிஎஸ் தரப்பு..!
இபிஎஸ் ஆதரவாளர்கள் ஏற்றுவதற்காக வைத்திருந்த அதிமுக கொடியினை ஒபிஎஸ் தரப்பினர் ஏற்றியதால் இருதரப்பிற்கும் மோதல் ஏற்பட்டது.
எம்ஜிஆர் பிறந்தநாள்
அதிமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான எம்ஜிஆரின் 107வது பிறந்தநாளை முன்னிட்டு ஓ. பன்னீர்செல்வத்தின் சொந்த தொகுதியான தேனி மாவட்டம் பெரியங்குளத்தில் அமைக்கப்பட்டிருந்த அதிமுக கொடிக்கம்பத்தில் ஈபிஎஸ் ஆதரவாளர்கள் அதிமுக கொடியினை ஏற்றுவதற்காகத் தயார் செய்து வைத்திருந்தனர்.
இந்நிலையில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அந்த கொடியினை ஏற்றியுள்ளனர் .இதனால் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. கடுமையான வாக்குவாதம் பின்னர் மோதலாக மாறியிருக்கின்றது.
பரபரப்பு
அதனை தொடர்ந்து அதிமுக இபிஎஸ் அணி மாவட்ட செயலாளர் முருகோடை ராமர், நகர, ஒன்றிய செயலாளர் மற்றும் முன்னாள் தேனி மக்களவை உறுப்பினர் பார்த்திபன் கொடியினை இறக்கியுள்ளார்.
அதன்பின் ஓபிஎஸ்’யால் அமைக்கப்பட்ட கொடிக்கம்பத்தை இபிஎஸ் தரப்பு சேதப்படுத்தியுள்ளது. பிரச்சனை பெரிதாவதை உணர்ந்த அங்கிருந்த போலிசார் இருதரப்பினரையும் சமாதானப்படுத்தி மோதலை கட்டுப்படுத்தினார்கள்.
இந்த மோதலில் அதிமுக இபிஎஸ் ஆதரவாளர்கள் ஓபிஎஸ் ஒழிக எனவும், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் எடப்பாடி பழனிசாமி ஒழிக என கோஷமிட்டனர். இந்த மோதலினால் பெரியக்குளம் பழைய பேருந்து நிலையப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.