இன்ஸ்டால்மெண்ட்'ல நடைபயணம் போறவரு எங்கள குறை சொல்லலாமா..? ஜெயக்குமார் விமர்சனம்
இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக ஆட்சி குறித்து அண்ணாமலை குறை சொல்லக் கூடாது என தெரிவித்துள்ளார்.
ஜெயக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பு
சென்னையில் மழை விட்டு விட்டு பெய்து வரும் நிலையில், துரித பணிகளில் மாநகராட்சி நிர்வாகம் துரிதமாக இறங்கியுள்ளது. மழை நீர் அங்கங்கே தேங்கினாலும், மாநகராட்சி பணியாளர்கள் தொடர்ந்து நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றார்.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், இது குறித்து பேசும் போது, அதிமுக ஆட்சியில் பல மழை நீர் வடிகால் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டதாக குறிப்பிட்டு அதனை தூர்வாருவதில் திமுக தவறிவிட்டது என குற்றம்சாட்டினார்.
பெரிதாக எங்கும் தண்ணி நிற்கவில்லை என மா சுப்ரமணியன் பேசிவருவதை சுட்டிக்காட்டிய விமர்சித்த ஜெயக்குமார், அவர் கிரீன்வெல்ஸ் சாலையில் வசிக்கிறார், தெருக்களில் வந்து பார்த்தால் தான் தண்ணி நிற்பது தெரியும் என்றார்.
பல இடங்களிலும் கழிவுநீரும் தண்ணீரோடு சேர்ந்து விட்டது என குற்றம்சாட்டிய அவரிடம் ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை என அண்ணாமலை பேசியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த ஜெயக்குமார், இன்ஸ்டால்மெண்ட்டில் நடைபயணம் மேற்கொள்ளும் அவர் அவரின் கண்ணில் தான் கோளாறு என்று கூறி, அவர் எங்களை குறை கூறக்கூடாது என பேசினார்.