தேர்தலை இப்படி தான் நடத்தணும் - அதிமுக கோரிக்கை - ஷாக்கான தேர்தல் ஆணையம்..?

ADMK D. Jayakumar Election
By Karthick Feb 23, 2024 12:19 PM GMT
Report

நாடாளுமன்ற தேர்தலில் வாக்காளர் பட்டியலில் இருக்கும் குளறுபடியை களைய வேண்டும் என ஜெயக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தேர்தல் கருத்து கூட்டம்

மக்களவை தேர்தல் முன்னிட்டு சென்னையில் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட 10 அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

jayakumar-advices-the-way-to-conduct-election

இந்த கூட்டத்தில் அதிமுக தரப்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டார். கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசும் போது, தேர்தலை நியாயமான ஜனநாயக முறையில் நடத்தப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டதாக குறிப்பிட்டு, வாக்காளர் பட்டியலில் உள்ள முரண்பாடுகள் களையப்பட வேண்டும் என்று வலியுறுத்தியதாக தெரிவித்தார்.

மகனுக்கு சீட் கேட்பது வாரிசு அரசியலில் வராது - ஜெயக்குமார் விளக்கத்தை கேட்டேங்களா..?

மகனுக்கு சீட் கேட்பது வாரிசு அரசியலில் வராது - ஜெயக்குமார் விளக்கத்தை கேட்டேங்களா..?

துணை ராணுவம்

மேலும், வாக்காளர் பட்டியலில் இருக்கும் இரட்டைப்பதிவுகள், இறந்தவர்களின் பெயர்கல் போன்ற குறைகள் களையப்பட்டு, பதற்றமான வாக்குசாவடிகளை கண்டறிந்து, கூடுதல் மத்திய பாதுகாப்பு படையினரை குவிக்க வேண்டும் என கேட்டதாக தெரிவித்தார்.

jayakumar-advices-the-way-to-conduct-election

தேர்தல் நடைபெறுவது கடுமையான கோடை காலம் என்பதால், வாக்காளர்களுக்கு குடிநீர், ஷாமியான போன்ற வசதிகளும் ஏற்படுத்தி தர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளதாக ஜெயக்குமார் செய்தியளர்களிடம் தெரிவித்தார்.