சட்டமன்ற தேர்தலில் அதிமுக - விஜய் கூட்டணி..? ஜெயக்குமார் நச் பதில்!
அதிமுகவுடன் விஜய் கூட்டணி சேருவாரா? என்ற கேள்விக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார்.
ஜெயக்குமார்
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் தனது 50-வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். அவருக்கு திரையுலகினர், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள், தொண்டர்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்தனர்.
அந்தவகையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். இதனால் அடுத்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் விஜய் கூட்டணி சேருவாரா? என்று ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.
கூட்டணியா?
அதற்கு பதிலளித்த அவர் "விஜய்யும் பொதுச்சேவையில் தன்னை ஈடுபடுத்தி இருக்கிறார். அவருக்கு வாழ்த்து தெரிவித்தது அரசியல் பண்பாட்டின் அடிப்படையில் தான். வாழ்த்து சொன்னதை வைத்து கூட்டணிக்கு அழைத்ததாக அர்த்தம் இல்லை.
ஆனால் அரசியலில் நிரந்தர நண்பனும் கிடையாது. நிரந்தர எதிரியும் கிடையாது. தேர்தல் நேரத்தில் எதுவேண்டுமானாலும் நடக்கலாம். கூட்டணிகளை கட்சி தலைமைதான் தேர்தல் நேரத்தில் முடிவு செய்யும்" என்று தெரிவித்துள்ளார்.