ஐஸ்வர்யாவின் அம்மா அப்படி இருந்திருப்பார்; நான் ஏன் இருக்க வேண்டும்? ஜெயா பச்சன் வீடியோ வைரல்

Aishwarya Rai Abhishek Bachchan
By Karthikraja Aug 14, 2024 12:30 PM GMT
Report

நடிகை ஐஸ்வர்யாராய் குறித்து ஜெயா பச்சன் பேசிய பழைய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

ஐஸ்வர்யா ராய்

பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஐஸ்வர்யா ராய். இவர் தமிழில் இருவர், ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ராவணன், எந்திரன், பொன்னியின் செல்வன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். 

aishwarya rai abhishek bachchan latest photo

இவர் 2007 ஆம் ஆண்டு சக நடிகரான அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஆராத்யா என்ற மகள் உள்ளார். 

ஐஸ்வர்யாராய் உடன் விவாகரத்தா? மவுனம் கலைத்த அபிஷேக் பச்சன்

ஐஸ்வர்யாராய் உடன் விவாகரத்தா? மவுனம் கலைத்த அபிஷேக் பச்சன்

விவாகரத்து

இந்நிலையில், கடந்த சில மாதங்களாக அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யாராய் விவாகரத்து பெற உள்ளார்கள் என வதந்திகள் பரவி வந்தன. சமீபத்தில் நடந்த அம்பானி மகன் திருமணத்தில் ஐஸ்வர்யா ராய் தன் மகளுடன் தனியாகவும், அபிஷேக் பச்சன் தன் பெற்றோருடன் தனியாகவும் வந்திருந்ததால், விவாகரத்து கிட்டத்தட்ட உண்மை தான் என்கிற அளவுக்கு பேசத் தொடங்கினர். 

சமீபத்தில் அபிஷேக் பச்சன் அளித்த பேட்டியில், தனது திருமண மோதிரத்தை காட்டி நாங்கள் இப்பவும் தம்பதிகளாக தான் இருக்கிறோம் என வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

ஜெயா பச்சன்

ஐஸ்வர்யா ராய்க்கும், அவரின் மாமியார் ஜெயா பச்சனுக்கும் ஆகவே ஆகாது என்ற பேச்சு நீண்டகாலமாக அடிபட்டு வருகிறது. இந்நிலையில் ஐஸ்வர்யா ராய் குறித்து மாமியார் ஜெயா பச்சன் பேசிய பழைய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. 

aishwarya rai jaya bachan

இதில் நீங்கள் கண்டிப்பான அம்மா. ஆனால் கண்டிப்பான மாமியாரா என கேட்கப்பட்டதற்கு, "கண்டிப்பாக இருக்க அவள் என் மகள் அல்ல, மருமகள். அவளிடம் நான் ஏன் கண்டிப்பாக இருக்க வேண்டும்? அவருடைய அம்மா அவரிடம் கண்டிப்பாக இருந்திருப்பார்" என பதிலளித்துள்ளார்.  

மேலும், மகளுக்கும் மருமகளுக்கும் வித்தியாசம் இருக்கிறது. பெற்றோருக்கு மதிப்பு கொடுக்கணும் எனமகள் நினைக்க மாட்டார். ஆனால் மருமகள், மாமனார் மாமியார் விஷயத்தில் அப்படி செய்ய முடியாது என பேசியுள்ளார்.