ஐஸ்வர்யாராய் உடன் விவாகரத்தா? மவுனம் கலைத்த அபிஷேக் பச்சன்

Aishwarya Rai Abhishek Bachchan
By Karthikraja Aug 12, 2024 12:13 PM GMT
Report

ஐஸ்வர்யாராய் உடன் விவாகரத்து குறித்த கேள்விக்கு அபிஷேக் பச்சன் பதிலளித்துள்ளார்.

ஐஸ்வர்யா ராய்

இந்தியாவிலிருந்து உலக அழகிப்பட்டம் பல பேர் பெற்றிருந்தாலும் மக்கள் மனதில் சட்டென வருபவர் ஐஸ்வர்யா ராய் தான். இவர் தமிழில் இருவர், ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ராவணன், எந்திரன், பொன்னியின் செல்வன் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

aishwarya rai abhishek bachchan

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக விளங்கிய இவர் 2007 ம் ஆண்டு சக நடிகர் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஆராத்யா என்ற ஒரு மகள் உள்ளார்.

விவாகரத்து

இந்நிலையில், கடந்த சில மாதங்களாக அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யாராய் விவாகரத்து பெற உள்ளார்கள் என வதந்திகள் பரவி வந்தன. இதற்கு வலு சேர்க்கும் வகையில் சமீபத்தில் நடந்து முடிந்த அம்பானி மகன் திருமணத்தில் ஐஸ்வர்யா ராய் தன் மகளுடன் தனியாகவும், அபிஷேக் பச்சன் தன் பெற்றோருடன் தனியாகவும் வந்திருந்தனர். இதனால் அவர்கள் விவாகரத்து கிட்டத்தட்ட உண்மை தான் என்கிற அளவுக்கு பேசத் தொடங்கினர். 

aishwarya rai ambani wedding

மேலும், விவாகரத்து உண்மை தான் என அபிஷேக் பச்சன் பேசுவது போன்ற வீடியோ ஒன்று சமீபத்தில் வைரல் ஆனது. இது டீப் ஃபேக் டெக்னாலஜியை பயன்படுத்தி போலியாக உருவாக்கப்பட்ட வீடியோ என சமீபத்திய பேட்டியில் அபிஷேக் பச்சன் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.

பாரிஸில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியை காண சென்ற அபிஷேக் பச்சன் அங்கு அளித்த பேட்டியில், தனது திருமண மோதிரத்தை காட்டி நாங்கள் இப்பவும் தம்பதிகளாக தான் இருக்கிறோம். எங்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை. நாங்கள் பிரபலங்கள் என்பதால் இப்படி அடிக்கடி வதந்திகளை பரப்புகிறார்கள் எனக்கூறி விவாகரத்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.