ICC தலைவராக தேர்வான ஜெய்ஷா ஒரு.. நடிகர் பிரகாஷ் ராஜ் போட்ட ட்விட்!
ஐசிசி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜெய்ஷாவை நடிகர் பிரகாஷ் ராஜ் விமர்சித்துள்ளார்.
ஜெய்ஷா
ஐஐசி தலைவராக இருந்த நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த கிரெக் பார்க்லே பதவிக்காலம் நவம்பர் மாதத்துடன் முடிவடையுள்ளது . மேலும் 3வது முறையாக போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்துள்ளார்.
இதையடுத்து ஐசிசி தலைவர் பதவிக்கான வேட்பு மனுத் தாக்கல் நடைபெற்றபோது பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா மட்டும் மனு தாக்கல் செய்திருந்தார்.
அவரை எதிர்த்து யாரும் போட்டியிடாத நிலையில், ஜெய்ஷா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். டிசம்பர் முதல் ஐஐசி தலைவராக பொறுப்பேற்கும் ஜெய்ஷா இந்த பதவியில் 3 ஆண்டுகள் இருப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் பிரகாஷ் ராஜ்
இந்நிலையில்,சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக போட்டியின்றி ஜெய் ஷா தேர்வு செய்யப்பட்டுள்ளதற்கு நடிகர் பிரகாஷ் ராஜ் விமர்சித்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் எக்ஸ் தளத்தில் பதிவில் , ”ஐசிசி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மிகப்பெரிய சாதனையாளரை அனைவரும் கைத்தட்டி வரவேற்போம்.
ஜெய்ஷா ஒரு சிறந்த பேட்ஸ்மேன், பந்துவீச்சாளர், விக்கெட் கீப்பர்; இந்திய கிரிக்கெட் உருவாக்கிய சிறந்த ஆல் ரவுண்டர். ஒரு மனதாக ஐசிசி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்துகள். ” என்று தெரிவித்துள்ளார்.