அமரன் திரைப்படம் வெறுப்பை விதைக்கின்ற படம் - கொந்தளித்த ஜவாஹிருல்லா !

Kamal Haasan Sivakarthikeyan Amaran
By Vidhya Senthil Nov 07, 2024 07:17 AM GMT
Report

அமரன் திரைப்படம் வெறுப்பை விதைக்கின்ற வரலாற்றைத் திரிக்கின்ற திரைப்படங்களின் ஒன்றாக உள்ளது என ஜவாஹிருல்லா கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

அமரன்

அமரன் திரைப்படம் மண்ணுரிமைப் போராளிகளை தீவிரவாதிகளாக சித்திரம் தீட்டி அந்த வெறுப்பின் வீச்சை ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயத்தின் மீதும் பரப்பும் நுண்ணிய கருத்தியல் பயங்கரவாதத்தை கைக்கொண்டிருக்கிறது.

amaran movie

காஷ்மீர் பைல்ஸ் ,கேரளா ஸ்டோரி’ போன்ற கயமைத்தன படங்களின் கருத்தியலை வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல கலைநயமாக ஏற்றியுள்ள படமாக ‘அமரன்’இருப்பதை முற்போக்கு விமர்சகர்கள் ஆதாரங்களோடு நிறுவியுள்ளனர்.

உன்னைப் போல் ஒருவன் விஸ்வரூபம் ஆகிய திரைப்படங்களை எடுத்தும் அவற்றில் நடித்தும் முஸ்லிம் சமுதாயத்தின் மீது பயங்கரவாத களங்கத்தை கலை நுட்பத்தோடு சுமத்தி, கண்டனத்திற்கு ஆளான கமலஹாசனின் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

வடக்கு தெற்கு என முதல்வர் ஸ்டாலின் பிரிவினைவாதம் பேச கூடாது - வானதி சீனிவாசன் கண்டனம்

வடக்கு தெற்கு என முதல்வர் ஸ்டாலின் பிரிவினைவாதம் பேச கூடாது - வானதி சீனிவாசன் கண்டனம்

அவரை தேர்தலில் வென்ற பாஜக நிர்வாகி வானதி சீனிவாசன் இப்படத்தை பள்ளிக்கூடங்களில் திரையிட வேண்டும் என்று பாராட்டுகிறார்.பிஞ்சுகளின் நெஞ்சுகளில் நஞ்சுகளை விதைக்கும் வெளிப்பட்ட வார்ப்படமே இந்த போர்ப்படம் என்பதற்கு இதைவிட வேறென்ன சான்று இருக்க முடியும்.

  வெறுப்புணர்வு

மாவீரர் முகுந்த் வரதராஜனின் வீர, தீர தியாகத்தை மதித்து போற்றுவோம். அதே நேரத்தில் நூற்றுக்கணக்கான இஸ்லாமிய, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமூகங்களைச் சார்ந்த உயிர் கொடையாளர்களுக்கு இத்தகைய வெளிச்சம் தரப்படாமல் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளதும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தமிழ்நாடு எவ்வாறு மாநில உரிமைகளுக்காக போராடுகிறதோ, அதுபோல தான் காஷ்மீர் மக்கள் தங்கள் மண்ணின் உரிமைக்காக போராடுகிறார்கள். சினிமா என்ற செயற்கை இருளை வீசி அவர்களின் உரிமைப் போராட்டத்தை திரிப்பதும் அவர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை மறைப்பதும்

amaran movie

அவர்களை பயங்கரவாதிகளாக தொடர்ந்து மக்கள் மனத்தில் விதைப்பதும் அறிவு நாணயம் அற்ற அயோக்கியத்தனமான செயலாகும். ‘துப்பாக்கி’, ‘விஸ்வரூபம்’ போன்ற கேடுகெட்ட படங்கள் செய்த அதே திரிபு வாதத்தை ‘அமரன்’ என்ற திரைப்படமும் செய்திருக்கிறது. பாஜக பாராட்டுகின்ற எதுவும் தமிழர்களுக்கு நன்மையானதல்ல.

சமூகநீதிக்கு எதிரானது என்ற எளிய நிலைப்பாட்டிற்கு தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்கள் வரவேண்டும். பாஜக அரசு காஷ்மீருக்கு சிறப்புத் தகுதி தந்த அரசியல் சட்டப் பிரிவு 370 ஐ ரத்து செய்ததை நியாயப்படுத்துவது கலையல்ல நீதியின் கொலை ஆகும்.

சமூகநீதிக்கு எதிரானது

முஸ்லிம்களுக்கு எதிரான நச்சுக்கூறுகளைக் கொண்ட இப்படத்தை பல தலைவர்களும் அதன் நுண்ணரசியல் அறியாமல் இப்படத்தை பாராட்டி இருப்பதும் வேதனைக்குரியது. இதை எதிர்காலத்தில் தவிர்க்க வேண்டும்.

திரைப்படத் துறையில் இருக்கும் திறமைமிக்க கலைஞர்கள் எடுத்த படங்களான ‘மாநாடு’, ‘மாமனிதன்’, ‘அயோத்தி’, ‘மேற்கு தொடர்ச்சி மலை’, ‘ஜெய் பீம்’ போன்ற படங்களின் இயக்குநர்களுக்கு மனிதநேய மக்கள் கட்சியின் மாநாட்டு மேடையில் விருதளித்து கண்ணியப்படுத்தியுள்ளோம்.

amaran movie

தற்போது வெளிவந்துள்ள ‘நந்தன்’, ‘மெய்யழகன்’ உள்ளிட்ட படங்கள் பாராட்டுக்குரியவை. இவை மனிதநேயத்தையும் சமூக நல்லிணக்கத்தையும் வளர்க்கின்ற திரைப்படமாக இருந்தன.

வெறுப்பை விதைக்கின்ற வரலாற்றைத் திரிக்கின்ற திரைப்படங்களின் மூலம் சமூக நல்லிணக்கத்தை பாழ்படுத்தும் வேலை திரைப்படத்துறையினர் இனியும் தொடரக்கூடாது என வலியுறுத்தி வேண்டுகிறோம்.” என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.