இர்ஃபான் மீது கருணை வேண்டாம்...உடனே நடவடிக்கை எடுங்க - ஜவாஹிருல்லா வலியுறுத்தல்!
யூடியூபர் இர்ஃபான் மீது நடவடிக்கை எடுக்க கோரி மமக கட்சி தலைவர் ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.
இர்ஃபான்
பிரபல யூடியூபர் இர்பான் தனது மனைவி வயிற்றில் வளரும் குழந்தையின் பாலினத்தைத் துபாயில் மருத்துவ பரிசோதனை செய்து தெரிந்துக் கொண்டார். மேலும், அதனை வீடியோவாக வெளியிட்டிருந்தார். சுமார் 20 லட்சம் பேர் பார்த்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து, பிறக்கப்போகும் குழந்தையின் பாலினம் குறித்து அறிவித்த இர்பான் மீது சுகாதாரத்துறை மூலமாக கடும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது. இந்தியாவில் சட்டப்படி இது குற்றமாக இருக்கும் நிலையில், வெளிநாட்டில் தனது மனைவியுடன் சென்று இந்த சோதனை செய்துள்ளார்.
ஜவாஹிருல்லா
இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவிக்க, அவரிடம் விளக்கம் கேட்டு சுகாதரத்துறை நோட்டீஸ் அனுப்பியது. ஆனால், அவர் மன்னிப்பு கேட்டு விட்டதாகவும் இதுதொடர்பாக வீடியோ ஒன்றையும் வெளியிடுவார் என்றும் சொல்லப்பட்டது. ஆனால், இதுவரை அப்படி ஒரு வீடியோ வெளியிடவில்லை. இதனால் பலரும் தங்கள் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லாவிலும் தனது எக்ஸ் பக்கத்தில் ட்வீட் ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அதில், ‘தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ள இருபானுக்குக் கருணை காட்டாமல் உரிய சட்ட நடவடிக்கையைத் தமிழக அரசு எடுக்க வேண்டும்’ எனக் கூறியுள்ளார்.