"கடந்த சில நாட்கள் என் வாழ்வில் அதிசயமாக உள்ளது" - புதுமாப்பிள்ளை பும்ராவின் டுவிட்

cricket wedding bumrah sanjana
By Jon Mar 21, 2021 01:40 PM GMT
Report

என் வாழ்வில் கடந்த சில நாட்கள் கனவு போல இருந்ததாக இந்தியா வேகப்பந்து வீச்சாளர் பும்ரா தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இந்தியா அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியுடன் தனது திருமணத்திற்காக விடுப்பு எடுத்துக்கொண்டார்.

அதனையடுத்து இவரது திருமணம் குறித்து பல்வேறு கருத்துகள் வெளிவந்தன. இவை எதற்கும் செவி சாய்காத பும்ரா கடந்த மார்ச் 15ஆம் தேதி தொகுப்பாளினி சஞ்சனா கணேசனை திருமணம் செய்துக்கொண்டார் இந்நிலையில், தற்போது அவர் தனது மனைவி சஞ்சனாவுடன் தான் இருக்கும் புகைகப்படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

கடந்த சில தினங்கள் மிகவும் அதிசயமானதாக உள்ளதாக அவர் தனது கேப்ஷனில் குறிப்பிட்டுள்ளார். ரசிகர்களிடம் இருந்து தங்களுக்கு கிடைத்துள்ள அன்பு மற்றும் வாழ்த்துக்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.