48 வருட உலகக்கோப்பை வரலாற்றில் முதன்முறையாக..! பும்ரா நிகழ்த்திய சாதனை!
உலகக் கோப்பை வரலாற்றில் ஆட்டத்தின் முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்திய இந்திய பந்து வீச்சாளர் என்ற சாதனையை பும்ரா நிகழ்த்தியுள்ளார்.
உலகக் கோப்பை
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் 2023 இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதுவரை ஆடிய 7 போட்டிகளிலும் அபார வெற்றி பெற்று இந்தியா அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.
இந்திய அணியில் ரோஹித் ஷர்மாவின் கேப்டன்சியும், நட்சத்திர வீரர் விராட் கோலியின் பேட்டிங்கும் சிறப்பாக இருப்பதால் இம்முறை இந்திய அணி நிச்சயம் உலகக் கோப்பையை வெல்லும் என இந்திய ரசிகர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.
அந்தவகையில் நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இந்தியா-இலங்கை அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 358 ரன்கள் குவித்து இமாலய இலக்கை நிர்ணயித்தது.
பும்ரா சாதனை
இதனையடுத்து களமிறங்கிய இலங்கை அணி இந்திய பவுலர்கள் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 55 ரன்களில் சுருண்டு படுதோல்வி அடைந்தது. மேலும், பும்ரா வீசிய போட்டியின் முதல் பந்தில் இலங்கை பேட்ஸ்மேன் நிசாங்கா எல்.பி.டபிள்யூ ஆனார்.
ரிவ்யூ எடுத்தும் பயனில்லாமல் நிசாங்கா விக்கெட்டை. இதனால் ஆட்டத்தின் முதல் பந்திலேயே பும்ரா விக்கெட்டை கைப்பற்றியதால், 48 வருட உலகக் கோப்பை வரலாற்றில், முதன்முறையாக ஆட்டத்தின் முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்திய இந்திய பந்து வீச்சாளர் என்ற பெருமையை பும்ரா பெற்றார். இதற்கு முன் எந்த பந்து வீச்சாளரும் ஆட்டத்தின் முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்தியது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.