அந்த அணிதான் உலகக் கோப்பையை வெல்லும்; புரியுறவங்களுக்கு புரியும் - தோனி கணிப்பு!
உலகக் கோப்பையில் இந்திய அணியின் ஆட்டம் குறித்து முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி பேசியுள்ளார்.
உலகக்கோப்பை
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் 2023 இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதுவரை ஆடிய 5 போட்டிகளிலும் அபார வெற்றி பெற்று இந்தியா அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.
அதில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து போன்ற அணிகளையும் இந்தியா வீழ்த்தியுள்ளது. இந்திய அணியில் ரோஹித் ஷர்மாவின் கேப்டன்சியும், நட்சத்திர வீரர் விராட் கோலியின் பேட்டிங்கும் சிறப்பாக இருப்பதால் இம்முறை இந்திய அணி நிச்சயம் உலகக் கோப்பையை வெல்லும் என இந்திய ரசிகர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர். மேலும், இன்று லக்னோவில் நடக்கும் போட்டியில் இந்திய-இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.
எம்.எஸ் தோனி
இந்நிலையில் இந்த உலகக் கோப்பையில் இந்தியாவின் ஆட்டம் குறித்து நிகழ்ச்சி ஒன்றில் முன்னாள் கேப்டன் எம்.எஸ் தோனியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த தோனி "இந்திய அணி மிகச் சிறப்பான அணி, அணியின் அனைத்து வீரர்களும் ஃபுல் ஃபார்மில் இருக்கிறார்கள்.
அனைத்து வீரர்களும் சிறப்பாக விளையாடி வருகின்றனர். அதற்கு மேல் என்னால் சொல்ல முடியாது. புரிந்து கொள்பவர்களுக்கு இது போதும்" என்று தோணி கூறினார். இதனை கேட்ட ரசிகர்கள் தோனி சூசகமாக இந்திய அணி நிச்சயம் உலகக்கோப்பையை வெல்லும் என்று கூறுகிறார் என்று பதிவிட்டு வருகின்றனர்.

Optical illusion: படத்தில் நீங்கள் முதலில் பார்ப்பது கோளமென்றால்... நீங்கள் இப்படிப்பட்டவரா? Manithan

ஐந்து வருட விடுமுறையில் வெளிநாடு பறக்கும் அரச ஊழியர்கள் : அநுர அரசு எடுத்துள்ள உடனடி நடவடிக்கை IBC Tamil
