தங்கத்தை மிஞ்சும் மல்லிகை பூ: அதிரடி விலை உயர்வு - 1 கிலோ இவ்வளவா?
Tamil nadu
TN Weather
By Sumathi
கடும் பனிப்பொழிவால் மல்லிகைப்பூ விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.
மல்லிகைப்பூ விலை
கன்னியாகுமரியில், தோவாளை சந்தையில் பூக்களின் விலை உச்சம் தொட்டுள்ளது. அதில் மல்லிகை பூவின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. நேற்று ரூ.1500க்கு விற்பனையான மல்லிகைப்பூ இன்று ரூ.3500ஆக விலை உயர்ந்துள்ளது.
அதன் அடிப்படையில், தேனியில் மல்லிகைப்பூ அதிகபட்சனாக கிலோவுக்கு ரூ.5,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. மதுரையிலும் விலை அதிகரித்து கிலோவுக்கு ரூ.3,000க்கு மல்லிகைப்பூ விற்பனையாகிறது.
இதுகுறித்து வியாபாரிகள் தரப்பில் கூறுகையில், னிப்பொழிவின் காரணமாக பூக்கள் உற்பத்தி குறைந்துள்ளது. இதனால், பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.