‘தலை நிறைய மல்லிகைப்பூ, நெற்றியில் பொட்டு, கைக்கோர்த்தப்படி மணவாளன்’ : நயன் - விக்கி ஜோடியை காண திரண்ட கிராம மக்கள்!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக உள்ள நயன்தாரா நானும் ரௌடி தான் படத்தில் நடித்த போது அப்படத்தின் இயக்குநரான விக்னேஷ் சிவனுடன் காதலில் விழுந்தார்.
6 வருடங்களை கடந்துள்ள இந்த காதல் எப்போது திருமணத்தில் முடியும் என ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இதனிடையே நெற்றிக்கண் படத்தின் புரமோஷனுக்காக விஜய் டிவியில் தொகுப்பாளர் டிடிக்கு அளித்த பேட்டியில் தனக்கும் விக்னேஷ் சிவனுக்கும் நிச்சயதார்த்தம் ஆகிவிட்டதாக நயன்தாரா தெரிவித்து இருந்தார்.
இதனால் இந்தாண்டு அவர் திருமணம் செய்வார் என கூறப்பட்டது. சமீபத்தில் சில வாரங்களுக்கு முன்பு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல் படம் ரிலீசானது.
படத்தின் ரிலீசை தொடர்ந்து கோயில்களில் தொடர்ந்து சாமி தரிசனம் செய்து வந்த நிலையில் அண்மையில் திருப்பதிக்கு சென்றிருந்தனர்.
அங்கு தங்களது திருமண ஏற்பாடுகளை அவர்கள் பார்வையிட்டதாக கூறப்படுகிறது. மேலும் வரும் ஜூன் 9-ம் தேதி இவர்கள் இருவருக்கும் திருப்பதியில் திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியானது.
இந்நிலையில் தற்போது இந்த ஜோடி பாபநாசத்தில் உள்ள கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளது.
#Nayanthara #wikki #KRK #Trending #Viral #ViralVideo pic.twitter.com/8PfgxW9JwV
— VIP Tamil Online (@viptamilonline) May 23, 2022
பாபநாசம் அருகே வழுத்தூர் கிராமத்தில் உள்ள கோயிலில் நயன்தாரா - விக்னேஷ் ஜோடி சாமி தரிசனம் செய்தனர். அவர்களை காண கிராம மக்கள் அதிகளவில் கூடியதால் போலிசாரின் பாதுகாப்புடன் அவர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர்.