மதுரையில் ஒரு கிலோ மல்லிகை பூ ரூபாய் 3000க்கு விற்பனை
மதுரையில் ஒரு கிலோ மல்லிகை பூ விலை ரூ.3000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கிடு கிடுவென உயர்ந்த பூ விலை
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக பெய்து வரும் கனமழை காரணமாகவும், தொடர் முகூர்த்த தினம் என்பதாலும் மதுரையில் மல்லிகை பூ விலை கிடு கிடுவென விலை உயர்ந்துள்ளது.
மதுரையில் உள்ள மாட்டுத்தாவணி மலர் சந்தையில் பூக்களின் விலை கடும் உச்சம் தொட்டுள்ளது.
முகூர்த்த நாட்கள், பண்டிகை காலங்களை தவிர்த்து மற்ற நாட்களில் மல்லிகை பூ கிலோ ரூ.300 முதல் ரூ.600 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தியை பண்கையை அடுத்து ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.1600 முதல் ரூ.1800 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாகவும் நாளை முதல் 3 நாட்களுக்கு தொடர் முகூர்த்த நாள் என்பதாலும் மல்லிகை பூ விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இன்று மட்டும் பூக்களின் விலை பட்டியல்
மல்லிகை பூ ஒரு கிலோ ரூ. 3000
சம்மங்கி பூ ஒரு கிலோ ரூ. 300
பிச்சி பூ ஒரு கிலோ ரூ. 1000
முல்லை பூ ஒரு கிலோ ரூ. 1000
பட்டன் ரோஸ் ஒரு கிலோ ரூ.250
அரளி ஒரு கிலோ ரூ. 250
முகூர்த்தத்திற்கு சிவப்பு நிறத்தில் புடவை அணிவதால் என்ன நடக்கும் தெரியுமா....? உடனே தெரிஞ்சிக்கோங்க!