வரலாற்றில் இதுவே முதல்முறை - அமெரிக்கா கோடீஸ்வரர் விண்வெளியில் செய்த சம்பவம்
வரலாற்றில் முதல் ஆளாக கோடீஸ்வரர் ஜாரெட் ஐசக்மேன் விண்வெளியில் தனது நடைபயணத்தை மேற்கொண்டார்.
விண்வெளி பயணம்
ஆய்வுப் பணிகளுக்காக விண்வெளிக்குச் செல்லும் வீரர்கள் விண்வெளியில் நடைபயணம் மேற்கொள்வது வழக்கம். தற்போது வரை 12 நாடுகளைச் சேர்ந்த 263 விண்வெளி வீரர்கள் விண்வெளி நடைபயணம் மேற்கொண்டுள்ளனர்.
ஆனால் வணிக ரீதியாக தொழில்முறை விண்வெளி வீரர் அல்லாத தனிநபர்களை விண்வெளியில் நடைபயணம் மேற்கொள்ள வைக்கும் முயற்சியில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் இறங்கி உள்ளது.
நடைபயணம்
இதன்படி, போலரிஸ் டான் என்ற இந்த திட்டத்தில் கோடீஸ்வரர் ஜாரெட் ஐசக்மேன்(Jared Isaacman), அன்னா மேனன், ஸ்காட் போட்டீட், சாரா கில்லிஸ் ஆகியோர் இதற்கென பிரத்யேகமாகத் தயார் செய்யப்பட்ட 'போலரிஸ் டான்' ( polaris dawn) என்ற விண்கலத்தில் கடந்த செப்டம்பர் 10 ஆம் தேதி விண்வெளிக்கு புறப்பட்டனர்.
SpaceX and the Polaris Dawn crew have completed the first commercial spacewalk!
— Polaris (@PolarisProgram) September 12, 2024
“SpaceX, back at home we all have a lot of work to do, but from here, Earth sure looks like a perfect world.” — Mission Commander @rookisaacman during Dragon egress and seeing our planet from ~738 km pic.twitter.com/lRczSv5i4k
செப்டம்பர் 11ஆம் தேதி பூமியின் சுற்றுவட்டப் பாதையில் நுழைந்த விண்கலத்திலிருந்து முதல் ஆளாக கோடீஸ்வரர் ஜாரெட் ஐசக்மேன் விண்வெளி நடைபயணத்தை மேற்கொண்டார். 15 நிமிட நடைப்பயணத்துக்கு பின் அவர் விண்கலத்துக்கு திரும்பியதையடுத்து, சாரா கில்லிஸ் விண்வெளி நடைபயணம் மேற்கொண்டார்.
இவர்கள் நடைபயணம் செய்யும் வீடீயோவை Space X நிறுவனம் வெளியிட்டுள்ளது. தொழில்முறையாக பலரும் விண்வெளியில் நடைபயணம் மேற்கொண்ட நிலையில் வணிக ரீதியாக ஜாரெட் ஐசக்மேன் மேற்கொண்ட நடைபயணம் விண்வெளி வரலாற்றில் ஒரு மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.