முதல் முயற்சியே தோல்வி - ஏவப்பட்ட சில வினாடிகளில் வெடித்துச் சிதறிய ராக்கெட்!
ஜப்பானின் முதல் தனியார் செயற்கைக்கோளை ஏந்திய ராக்கெட் ஏவப்பட்ட சில வினாடிகளிலேயே வெடித்துச் சிதறியுள்ளது.
கைரோஸ் ராக்கெட்
ஜப்பானின் ஸ்டார்ட்அப் நிறுவனமான 'ஸ்பேஸ் ஒன்' நிறுவனத்தின் கைரோஸ் ராக்கெட் இன்று விண்ணில் ஏவப்பட்டது. இந்த ராக்கெட் அந்நாட்டு அரசின் சிறிய அளவிலான சோதனை செயற்கைக்கோளை சுமந்தபடி சீறிப்பாய்ந்து.
ஆனால் ஏவுதளத்திலிருந்து புறப்பட்ட சில வினாடிகளில் பயங்கர சத்தத்துடன் ராக்கெட் வெடித்துச் சிதறியது. இதில் 18 மீட்டர் நீளமுள்ள ராக்கெட் மற்றும் செயற்கைக்கோள் வெடித்துச் சிதறி தீப்பிடித்தன.
பின்னடைவு
இதனால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. பின்னர் ஸ்பிரிங்லர்கள் மூலம் தண்ணீர் தெளிக்கப்பட்டதை அடுத்து, எரிந்து கொண்டிருந்த பாகங்கள் சுற்றியுள்ள மலை சரிவுகளில் விழுந்தன.
பூமியின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக செயற்கைக்கோளை நிலைநிறுத்திய முதல் ஜப்பான் தனியார் நிறுவனம் என்ற பெருமையை ஸ்பேஸ் ஒன் நிறுவனம் பெறும் என்று பெரிது எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முதல் முயற்சியே தோல்வியடைந்தது ஜப்பானின் ஒரு பின்னடைவாக கருதப்படுகிறது.