குளிக்க சோம்பேறியா? வெறும் 15 நிமிஷம்தான் - மனிதர்களை குளிப்பாட்டும் மெஷின்!

Japan
By Sumathi Dec 10, 2024 09:00 AM GMT
Report

மனிதர்களை சுத்தப்படுத்தக்கூடிய வாஷிங் மெஷின் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

வாஷிங் மெஷின் 

முதல் முறையாக மனிதர்களை குளிப்பாட்டும் வாஷிங் மெஷினை ஜப்பான் நிறுவனம் வெளியிட்டுள்ளது. சயின்ஸ் கம்பெனி என்ற நிறுவனம் இந்த மனித வாஷிங்மெஷினை அறிமுகம் செய்துள்ளது.

human washing machine

மனிதர்களை 15 நிமிடங்களில் இந்த மெஷின் குளிப்பாட்டி காய வைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் தெரிவிக்கையில், மேம்பட்ட தண்ணீர் பீய்ச்சும் ஜெட் மற்றும் நுண்ணிய காற்று குமிழ்கள் ஆகியவற்றைக் கொண்ட ஸ்பா போன்ற அனுபவத்தை இந்த இயந்திரம் தரும்.

இதை பயன்படுத்துபவர்களுக்கு அமைதியான அனுபவம் கிடைக்கும். வெதுவெதுப்பான நீரில் பாதியளவு நிரம்பிய ஒரு வெளிப்படையான ஜெட் விமானம் போன்ற அமைப்புக்குள் நுழையும் போது, அதில் இருந்து வரும் அதிவேகமான நீரில் நுண்ணிய குமிழ்கள் வந்து, அவை உங்கள் உடல் மீது பரவி, அசுத்துங்களை அகற்றும்.

நடுவானில் ஹெலிகாப்டர்கள் மோதி பயங்கர விபத்து - 5 வீரர்கள் பலி!

நடுவானில் ஹெலிகாப்டர்கள் மோதி பயங்கர விபத்து - 5 வீரர்கள் பலி!

ஜப்பானில் அறிமுகம் 

ஏஐ தொழில்நுட்பத்தின் உதவியால், துவைக்கப்படுபவர் உடல் அறிகுறிகளைக் கண்காணிக்கப்படும். அதன் அடிப்படையில், தண்ணீர் பீய்ச்சும் பம்ப்பின் அழுத்தம், தண்ணீரின் வெப்பம் ஆகியவை கட்டுப்படுத்தப்படுகிறது. இந்த நவீனமயமாக்கப்பட்ட இயந்திரம், ஒசாகா எக்ஸ்போ -2025ல் அறிமுகமாகிறது.

குளிக்க சோம்பேறியா? வெறும் 15 நிமிஷம்தான் - மனிதர்களை குளிப்பாட்டும் மெஷின்! | Japans New Human Washing Machine Details Viral

கண்காட்சியில் 1,000 பேர் பங்கேற்று அதை நேரடியாக அனுபவிக்கவுள்ளனர். அதற்கான சோதனையை தீவிரமாக செய்து மக்களின் பயன்பாட்டிற்கு விரைவில் கொண்டு வர நாங்கள் தயாராக இருக்கிறோம். இது வாடிக்கையாளர் மத்தியில் புதிய புரட்சியை ஏற்படும் என உறுதியாக நம்புகிறோம்.

இந்த இயந்திரத்தை வாங்குவதற்கான முன்பதிவு இணையதளத்தில் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.