மன அழுத்தத்தை ஓப்பனாக சொன்ன உழியர்கள் - உடனே வேலையை பறித்த அவலம்!

Delhi India Viral Photos Social Media
By Swetha Dec 10, 2024 03:45 AM GMT
Report

மன அழுத்தம் இருப்பதாக ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.

உழியர்கள் 

டெல்லியை தலமையிடமாக கொண்டு செயல்படும் ஸ்டார்ட்-அப் நிறுவனம் தான் ’யெஸ்மேடம்’. இந்த ஆப் சலூன் ஹோம் சர்வீஸ் செய்து வருகிறது. அண்மையில் இந்த நிறுவனம் பணிச்சுமை காரணமாக ஏற்படும் மன அழுத்தம் தொடர்பாக ஆய்வு ஒன்றை நடத்தியது.

மன அழுத்தத்தை ஓப்பனாக சொன்ன உழியர்கள் - உடனே வேலையை பறித்த அவலம்! | Employees Was Fired From Company For Having Stress

அந்த வகையில் ’யெஸ்மேடம்’ நிறுவன ஊழியர்கள் மத்தியில் நடத்திய ஆய்வில் பல அதிர்ச்சி தகவல் வெளியாகியது. அதில், பணிசுமையால் அதிகப்படியான மன அழுத்தம் இருப்பதாக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனை வெளிப்படையாக சொன்ன ஒவ்வொரு ஊழியர்களையும் பணிநீக்கம் செய்திருப்பது தான் மிகப்பெரிய அதிர்ச்சியான தகவலாக வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக அந்நிறுவனத்தின் மனிதவள மேலாளர் (HR) அனுப்பியதாகக் கூறப்படும் மின்னஞ்சல் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

அந்த மின்னஞ்சலில், “அன்புள்ள குழு, சமீபத்தில், வேலையில் ஏற்படும் மனஅழுத்தத்தைப் பற்றிய உங்கள் கருத்துகளை புரிந்துகொள்ள நாங்கள் ஒரு கருத்துக்கணிப்பை நடத்தினோம். அதில், பலர் உங்களுடைய கவலைகளைப் பகிர்ந்துள்ளீர்கள்.

மனஅழுத்தத்திலிருந்து விடுபட முடியவில்லையா? கவலை வேண்டாம்... இதை செய்யுங்கள்...

மனஅழுத்தத்திலிருந்து விடுபட முடியவில்லையா? கவலை வேண்டாம்... இதை செய்யுங்கள்...

வேலை

அதை நாங்கள் மதிக்கிறோம். ஆரோக்கியமான பணிச்சூழலை உருவாக்குவதில் உறுதிபூண்டுள்ள இந்நிறுவனம், உங்களின் கருத்துகளை கவனமாகப் பரிசீலித்தது. பணியிடத்தில் யாரும் மன அழுத்தத்திற்கு ஆளாகாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக,

மன அழுத்தத்தை ஓப்பனாக சொன்ன உழியர்கள் - உடனே வேலையை பறித்த அவலம்! | Employees Was Fired From Company For Having Stress

மன அழுத்தம் இருப்பதாகக் குறிப்பிட்ட ஊழியர்களை விடுவிப்பதற்கான முடிவை எடுத்துள்ளோம். இந்த முடிவு உடனடியாக அமலுக்கு வருகிறது, மேலும் இதுகுறித்த விவரங்களும் வெளிவரும். உங்கள் பங்களிப்புகளுக்கு நன்றி. அன்புடன், மனிதவள மேலாளர், யெஸ் மேடம்” என்று கூறப்பட்டுள்ளது.

நிறுவனத்தின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. இது குறித்து இண்டிகோவின் டிஜிட்டல் மார்க்கெட்டிங் இணை இயக்குநரான ஷிடிஸ் டோக்ராவும் தனது லிங்க்ட்இன் கணக்கில் இந்த ஸ்கிரீன் ஷாட்டைப் பகிர்ந்து,

"ஒரு நிறுவனம் உங்களை மனஅழுத்தத்தில் இருந்து நீக்க முடியுமா? இது ஒரு ஸ்டார்ட்அப்பில் நடந்ததுபோல் தெரிகிறது" என யெஸ்மேடம் நோக்கி கருத்து தெரிவித்துள்ளார். இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்ந்து இணையத்தில் பெரும் பேசுப்பொருளாக மாறியுள்ளது.