கின்னஸில் இடம்பெற்ற உலகின் விலையுயர்ந்த ஐஸ்கிரீம் - அப்படி என்ன ஸ்பெஷல்!

Japan Ice Cream
By Sumathi May 19, 2023 07:34 AM GMT
Report

உலகின் மிக விலையுயர்ந்த ஐஸ்கிரீம் கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது.

பைகுயா

ஜப்பானிய ஐஸ்கிரீம் பிராண்டான செல்லாடோ தயாரித்த ‘பைகுயா’ உலகின் மிக விலை உயர்ந்ததாக கருதப்படுகிறது. இந்திய மதிப்பில் இந்த ஐஸ்கிரீமின் விலை 5 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கின்னஸில் இடம்பெற்ற உலகின் விலையுயர்ந்த ஐஸ்கிரீம் - அப்படி என்ன ஸ்பெஷல்! | Japanese Worlds Most Expensive Ice Cream

இதில், அரிதான வகை பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. தங்கத் துகள்கள், வெள்ளை truffle என்ற பொருளையும் சேர்ப்பதால் தான் இந்த ஐஸ்கிரீமுக்கு இவ்வளவு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கின்னஸ் சாதனை

மேலும், Parmigiano Reggiano என்ற அரிய வகை cheese-உம் இந்த ஐஸ்கிரீமில் சேர்க்கப்பட்டுள்ளது. இதனை ஒன்றரை வருட முயற்சிக்கு பிறகே உருவாக்கியுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இது கின்னஸ் சாதனையையும் படைத்துள்ளது.