ஐஸ்கிரீம் ஆர்டர் செய்தவருக்கு ஆணுறையா? ஸ்விக்கி கொடுத்த அதிர்ச்சி!
ஐஸ்கிரீம் ஆர்டர் செய்த நபருக்கு ஆணுறை டெலிவரி செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐஸ்கிரீம் ஆர்டர்
கோவையைச் சேர்ந்த நபர் ஒருவர் நேற்று தனது குழந்தைகளுக்காக உணவு டெலிவரி செய்யும் நிறுவனமான ஸ்விக்கியில் ஐஸ்கிரீம் மற்றும் சிப்ஸ் ஆர்டர் செய்துள்ளார்.
ஆனால் இவருக்கு வந்த டெலிவரி பார்சலில், ஐஸ்கிரீமுக்கு பதிலாக ஆணுறை இருந்துள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், அதனை புகைப்படம் எடுத்து தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து, ஸ்விக்கியிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆணுறை டெலிவரி
அதற்கு ஸ்விக்கி நிறுவனம் இந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்டு பணத்தை திருப்பி அளிப்பதாக கூறியுள்ளது. ஆனால், அந்த வாடிக்கையாளர் பணம் வேண்டாம் என்றும், சரியான பொருட்களை டெலிவரி செய்யுமாறும் கேட்டுக் கொண்டுளார்.
இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பலர் உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்தில், எப்படி ஆணுறை என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.