பிரபல பாடகருக்கு கழுத்தில் முத்தம் கொடுத்த பெண்; போலீஸ் சம்மன் - என்ன காரணம்?
பிரபல பாடகருக்கு முத்தம் பெண்ணுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
பாடகர் ஜின்
தென் கொரியாவைச் சேர்ந்தது பி.டி.எஸ்., இசைக்குழு. 2013ல் 7 இளைஞர்களால் இந்த குழு துவங்கப்பட்டது. இவர்களின் பாடல்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.
இங்கு 18 வயது நிரம்பிய அனைவரும், 18 மாத கட்டாய ராணுவ பயிற்சியில் பங்கேற்க வேண்டும். ஆனால், பி.டி.எஸ்., இசைக்குழுவைச் சேர்ந்தவர்கள், 30 வயதுக்குள் கட்டாய பயிற்சி எடுக்க தளர்வு வழங்கப்பட்டுள்ளது.
பெண்ணுக்கு சம்மன்
இதில், பாடகர் ஜின்(32) கடந்த ஆண்டு ஜூனில் இந்த ராணுவ பயிற்சியை நிறைவு செய்தார். அந்த நிகழ்ச்சியையும், குழுவின் 11ம் ஆண்டு நிறைவு விழாவையும் கொண்டாடும் வகையில் சியோலில் ரசிகர்களை சந்தித்தார்.
அப்போது 50 வயது பெண், ஜின்னை கட்டிப்பிடித்து கழுத்தில் முத்தம் கொடுத்தார். ஜின் இதனை அனுமதிக்கவில்லை. உடனே, இதுகுறித்து போலீசில் சிலர் ஆன்லைன் வாயிலாக புகார் அளித்துள்ளனர்.
அதன் அடிப்படையில் போலீஸார் முத்தம் தந்த பெண் ஜப்பான் நாட்டைச் சேர்ந்தவர் என அடையாளம் கண்டுள்ளனர். அவர் மீது, பாலியல் தொந்தரவு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து அவரை, விசாரணைக்காக ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.