அமெரிக்காவில் கோல்டன் விசா; இந்தியர்களுக்கு ஆப்பு - என்ன காரணம்?
அமெரிக்காவில் கோல்டு கார்டு விசா கொண்டு வரப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கோல்டு கார்டு விசா
அமெரிக்காவில் பணக்காரர்கள் குடியேறி அங்கே முதலீடு செய்யும் விதமாக, அங்கேயே வாழ்ந்து வரி கட்டும் விதமாக, வேலைகளை ஏற்படுத்தும் விதமாக முதலீட்டாளர்களுக்கான விசா அங்கே அமலில் உள்ளது.
இதை EB-5 விசாக்கள் என்று அழைக்கின்றனர். குறைந்தபட்சம் 10 பேர் வேலை செய்யும் ஒரு நிறுவனத்தில் சுமார் $1 மில்லியன் செலவழிக்கும் நபர்களுக்கு மட்டுமே இந்த விசா கிடைக்கும். இந்நிலையில், இந்த விசா நீக்கப்பட்டு தற்போது கோல்டு கார்டு விசா அமலுக்கு வரவுள்ளது.
இந்தியர்கள் பாதிப்பு
அதன் தொகையும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நடைமுறை இந்திய விசா விண்ணப்பதாரர்களுக்கு குறிப்பிடத்தக்க தாக்கங்களை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய விதியின் படி, 50 கோடி ரூபாய் வரை கட்ட வேண்டும். இதனால் இந்தியர்கள் அவ்வளவு எளிதில் இந்த விசாவை வாங்க முடியாது.
இதுகுறித்து டிரம்ப் கூறுகையில், கோல்டு கார்டு பெற விண்ணப்பிக்கும் நபர்கள் செல்வந்தர்களாக இருப்பார்கள். அவர்கள் வெற்றி பெற்ற நபர்களாக இருப்பார்கள். மேலும் அவர்கள் நிறைய பணம் செலவழிப்பார்கள். எங்களுக்கு நிறைய வரிகளை செலுத்துவார்கள்.
அமெரிக்காவில் நிறைய பேருக்கு வேலை கொடுப்பார்கள். இதனால் அமெரிக்கா மிகவும் வெற்றிகரமாக இருக்கும் என்று நாங்கள் நினைக்கிறோம். அடுத்த சில நாடுகளில் 1 கோடி கோல்டன் விசாக்களை விற்க முடிவு செய்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.