டிரம்ப் - எலான் மஸ்க் முத்தக்காட்சி வீடியோ - அரசு அலுவலகத்தில் திரையிட்ட கொடுமை
எலான் மஸ்கிற்கு டொனால்ட் டிரம்ப் முத்தம் கொடுத்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முத்தக்காட்சி
அமெரிக்க அதிபரான டொனால்ட் டிரம்ப் அமைச்சரவையில் எலான் மஸ்கிற்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இருவரது செயல்பாடுகளும், நடவடிக்கைகளும் அமெரிக்கர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.
இந்நிலையில், எலான் மஸ்கின் காலை டொனால்ட் டிரம்ப் முத்தமிடுவது போன்ற வீடியோ வைரலாக பரவி வருகிறது. அங்குள்ள அரசு அலுவலகத்தில் உள்ள தொலைக்காட்சியில் இந்த வீடியோ திரையிடப்பட்டுள்ளது.
தீவிர விசாரணை
வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு துறையின் தலைமையகத்தில் உள்ள உணவக தொலைக்காட்சியில் திரையிடப்பட்டது. இதுதொடர்பாக அமெரிக்க சைபர் நிபுணர்கள் மற்றும் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனா்.
இந்த வீடியோ ஏ.ஐ. மூலம் உருவாக்கப்பட்டதாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.