1 நண்டு ரேட் ரூ.56,000; இவ்வளவு பில்லா? பதறிய பயணி - உணவகத்தின் பதில் என்ன தெரியுமா?
ஒரு நண்டு உணவின் விலை தலை சுற்றவைத்துள்ளது.
நண்டு உணவு
சிங்கப்பூரில், ஜுன்கோ ஷின்பா என்ற பெண் நண்பர்களுடன் சுற்றுலா சென்றுள்ளார். அங்கு ஒரு உணவகத்திற்குச் சென்றதில் உணவுக் கட்டணத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

என்னவென்றால், நண்டு உணவு ஒன்றிற்கு 680 டாலர் (ரூ. 56,503) வசூலிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் உணவின் விலை குறித்து தனக்குச் சரியாகத் தெரிவிக்கப்படவில்லை எனக் கூறி போலீஸை அழைத்துள்ளார்.
இவ்வளவு பில்லா?
அந்த உணவகத்தின் சிக்னேச்சர் டிஷ்ஷான அலாஸ்கன் கிங் சில்லி க்ராப் உணவை அங்குள்ள பணியாளர் பரிந்துரைத்ததை அடுத்து தான் ஆர்டர் செய்ததாக தெரிவித்துள்ளார். 20 டாலர் விலையுள்ள நண்டு உணவை காட்டிய பணியாளர், அது 100 கிராமுக்கான கட்டணம் என்பதை தெரியப்படுத்தவில்லை.

நண்டு சமைக்கப்படுவதற்கு முன்பு அதன் மொத்த எடை குறித்து தங்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை. 4 பேர் வழக்கமாக சாப்பிடும் அளவை விட நண்டு உணவு அதிகமாக, அதாவது சுமார் 3,500 கிராம் இருந்தது. ஒரு டின்னருக்கு இவ்வளவு செலவாகும் என்பதை அறிந்த நாங்கள் அனைவரும் வாயடைத்துவிட்டோம்.
முழு நண்டும் எங்களுக்காக சமைக்கப்படும் என்று யாரும் எங்களிடம் தெரிவிக்கவில்லை என குற்றம்சாட்டியுள்ளார். தொடர்ந்து, சம்பவ இடம் விரைந்த அதிகாரிகள் ஷின்பா குழுவினருக்கு மட்டும் அதிக கட்டணம் வசூலிக்கவில்லை என்றும்,
இதே உணவை ஆர்டர் செய்த மற்றொரு வாடிக்கையாளரிடமிருந்து இதே அளவு பணம் பெற்ற ரசீதையும் ஹோட்டல் நிர்வாகத்தினர் காட்டியுள்ளனர். அதன்பின், சில விவாதங்களுக்குப் பிறகு, சுமார் 78 டாலர் (ரூ. 6,479) தள்ளுபடி வழங்க ஒப்புக்கொண்டது.
ஜூலை 14 முதல் அஸ்தமிக்கும் குரு பகவான் : இந்த ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போவது உறுதி! Manithan