ஆசைப்பட்ட நண்டு சாப்பாடு; பெண் பலி - அதிர்ச்சி சம்பவம்!
நண்டு உணவு சாப்பிட்டு பெண் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெண் பலி
கரூர் மாவட்டம் பசுபதி பாளையம் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் தினேஷ்குமார் மற்றும் மனைவி கிருபா(25). கடந்த மூன்று மாதங்களுக்கு முன் இவர்களுக்கு திருமணம் ஆகியுள்ளது.
இவர்கள் கேரளா மாநில எல்லையான பகுதியில் உள்ள சிற்றார் என்ற இடத்திற்கு சுற்றுலா சென்றுள்ளனர். அதன்பின் அங்குள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கியுள்ளனர். பின்னர் அங்கு வழங்கப்பட்ட நண்டு உணவை இருவரும் விரும்பி சாப்பிட்டுள்ளார்.
அப்போது கிருபாவிற்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக தாங்கள் வாங்கி வைத்த மருந்துகளை உட்கொண்டுள்ளனர். ஆனால் மூச்சுத் திணறல் அதிகமாகவே அருகில் உள்ள மருத்துவமனைக்கு கிருபாவை கொண்டு சென்றுள்ளனர்.
ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
போலீசார் விசாரணை
இந்த சம்பவம் அறிந்து அங்கு வந்த கடையாலுமூடு போலீசார் கிருபாவின் உடலை மீட்டு ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரிக்கு உடல் கூராய்விற்காக அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விடுதியில் வழங்கப்பட்ட உணவால் கிருபா உயிரிழந்தாரா அல்லது வேறு ஏதும் காரணமா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நண்டு சாப்பிட்டு உயிரிழந்த இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.