பெண்ணை கொன்று உறவு: சடலத்தை தின்ற நபர் - திடுக்கிடும் சம்பவம்!

Attempted Murder Japan Crime Death
By Sumathi Dec 03, 2022 04:50 AM GMT
Report

பெண்ணை கொன்று சடலத்தை சாப்பிட்ட நபர் உயிரிழந்துள்ளார்.

கொடூரக் கொலை

ஜப்பானைச் சேர்ந்தவர் இஸ்ஸேயி சகாவா. இவர் பாரிஸில் படித்துக் கொண்டிருந்தபோது ரெனே ஹார்ட்வெல்ட் எனும் டச்சு பெண்ணை தனது வீட்டுக்கு இரவு உணவுக்கு அழைத்துள்ளார். அதன்படி வந்த பெண்ணை துப்பாக்கியால் சுட்டு சகாவா கொன்றுள்ளார்.

பெண்ணை கொன்று உறவு: சடலத்தை தின்ற நபர் - திடுக்கிடும் சம்பவம்! | Japanese Man Killing Raping Eating Dutch Woman

மேலும் அந்தச் சடலத்துடன் உடலுறவுக் கொண்டு, உடலை துண்டு துண்டாக வெட்டி சாப்பிடத் துவங்கியுள்ளார். பலநாட்களாக சாப்பிட்டுவிட்டு மீதமிருந்த பாகங்களை பாரிஸில் உள்ள பூங்காவில் புதைத்துள்ளார்.

சடலத்துடன் உறவு

தொடர்ந்து, போலீஸார் அவரை கைது செய்தனர். ஆனால் சகாவா மனநிலை ஒழுங்கிண்மையால் இருப்பதால், அவரை கைது செய்யவோ அல்லது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய அவசியமோ இல்லை என ஜப்பான் அரசாங்கம் மறுத்தது. இதையடுத்து ஜப்பானில் அவர் விடுதலை செய்யப்பட்டார்.

மேலும் கொலை குறித்து சகாவா உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊடகங்களுக்கு சகாவா பேட்டி அளித்தார். அப்போது பேட்டி எடுத்தவர் ஜப்பானிய பெண்ணின் படத்தை காட்டியபோது, ‘அந்த பெண் உண்ணுவதற்கு சுவையாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்’ என தெரிவித்தார்.

இந்நிலையில், வயது முதிர்வால் அவர் உடல்நிலை மோசமாகியது. இதனால் பக்கவாதம் ஏற்பட்டு சக்கர நாற்காலியில் இருந்துள்ளார். ஆகவே தனது சகோதரருடன் வசித்து வந்துள்ளார். 73 வயதான சகாவா, நிமோனியாவால் உயிரிழந்ததாக அவரது சகோதரர் தெரிவித்துள்ளார்.