வாடகை நண்பர் தெரியுமா? ஆண்டுக்கு ரூ.69 லட்சம் சம்பாதிக்கும் நபர்!
நண்பராக வாடகைக்கு செல்லும் நபர் ஒருவர் ஆண்டுக்கு ரூ. 69 லட்சம் சம்பாதித்து வருகிறார்.
வாடகை நண்பர்
ஜப்பானைச் சேர்ந்தவர் ஷோஜி மோரிமோட்டோ(41). 2018ல் அவர் பணிபுரிந்த நிறுவனத்தில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து தனிமையில் இருப்பவர்களுக்கு துணையாகப் போய்ச் சென்று தங்கி ஆறுதல் கூறியுள்ளார்.
இது, நாளடைவில் வருமானத்தைத் தரக்கூடியதாக மாறியுள்ளது. அதன்மூலம் தற்போது அந்த நபர் ஆண்டுக்கு 80,000 அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.69 லட்சம்) சம்பாதித்து வருகிறார்.
வீடியோ காலிலும்..
ஒருவர் வீட்டைச் சுத்தம் செய்யும்போது பேச்சுத் துணைக்காக நேரில் செல்வது, வீடியோ காலில் அவர்களுடன் உரையாடுவது போன்ற சேவைகளையும் செய்து வருகிறார். அதற்குத் தனியாக 2 முதல் 3 மணிநேரத்துக்கு அதிகபட்சமாக 10,000 முதல் 30,000 யென் (டாலர் 65 முதல் டாலர் 195 வரை) வரை கட்டணம் பெற்று வருகிறார்.
அதேநேரம் அவர் பாலியல் செயல்பாடுகள், காதல் துணை போன்றவற்றுக்கு இடம்கொடுப்பது இல்லை. இதற்காக வெயிலில் வரிசையில் நிற்பது, குளிரில் பல மணிநேரம் நிற்பது, அந்நியர்களுடன் மட்டும் பார்ட்டிகளில் கலந்துகொள்வது,
ஒன்றும் செய்யாமல் பெரிய பார்வையாளர்கள் முன்னிலையில் மேடையில் தனியாக நிற்பது, யமனோட் ரயில் பாதையில் 17 மணி நேரப் பயணம் செய்தது போன்ற பல்வேறு கடினமான சூழலையும் தான் சந்தித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.